Switch to
முக்கிய செய்தி
(4ம் இணைப்பு)
ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவ காவல்துறையினரால் கைது
[ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 04:45.22 PM ] []
இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனாதிபதி வேட்பாளருமான ஜெனரல் சரத் பொன்சேகா சற்று நேரத்திற்கு முன்னர் இராணுவ காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார். [மேலும்]
பிரதான செய்திகள்
சரத் பொன்சேகாவுக்கு இராணுவச்சட்டப்படி ஆயுள் தண்டனை வழங்கப்படலாம்
[ 2010-02-09 03:30:07 ] []
கைதுசெய்யப்பட்டுள்ள முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவருக்கு இராணுவ நீதிமன்றத்தினால், ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. [மேலும்]
சரத் பொன்சேகாவின் கைது சமூகத்தில் பிளவுகளை ஏற்படுத்தும்: அமெரிக்கா எச்சரிக்கை
[ 2010-02-09 01:41:16 ]
முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவின் கைது,  இலங்கையில் யுத்த மீட்சிக்கு பின்னர் பாரிய பிளவுகளுக்கு வழியை ஏற்படுத்திவிடும் என அமெரிக்கா அச்சம் வெளியிட்டுள்ளது. [மேலும்]
பிந்திய செய்திகள்
மகிந்த, கோத்தபாய, ரணில்,மங்கள ஆகியோர் வெளிநாடு சென்றிருந்த வேளையில் பொன்சேகா கைது!
[ 2010-02-09 11:28:21 ]
இலங்கையின் முக்கிய தலைவர்களான, ஜனாதிபதி மகிந்த, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் உத்தியோகபூர்வ மற்றும் தனிப்பட்ட விஜயங்களை மேற்கொண்டு வெளிநாடு சென்றிருந்த வேளையில் சரத் பொன்சேகாவின் கைது இடம்பெற்றிருக்கிறது.  [மேலும்]
எனது கணவர் கைதாகவில்லை, கடத்தப்பட்டுள்ளார்: அனோமா பொன்சேகா
[ 2010-02-09 11:04:23 ]
எனது கணவர் கைது செய்யப்படவில்லை, கடத்தப்பட்டிருக்கிறார். ''முப்பது வருடகால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்த இராணுவத் தளபதி ஒருவருக்கு அரசாங்கம் கொடுத்துள்ள சிறந்த பரிசு இது" என்று திருமதி அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார். [மேலும்]
செய்திகள்
உலகப் பொருளாதார நெருக்கடியின் காரணமாக 60000 இலங்கையர் வேலை வாய்ப்பு இழப்பு
[ செவ்வாய்க்கிழமை, 09 பெப்ரவரி 2010, 03:59.58 AM ]
உலகப் பொருளாதார நெருக்கடியின் காரணமாக சுமார் 60000 இலங்கையர்கள் வேலை வாய்ப்புக்களை இழந்துள்ளதாக அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வுத் தகவலொன்று சுட்டிக்காட்டுகின்றது. [மேலும்]
மகிந்தவிற்கு ரஷ்யாவில் தங்கக் கிரீடம் வழங்கி கௌரவம்
[ செவ்வாய்க்கிழமை, 09 பெப்ரவரி 2010, 03:49.03 AM ]
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச யுத்தத்தின் போது மேற்கொண்ட சேவைகளை கௌரவிக்கும் வகையில் ரஷ்யாவில் தங்கத்திலான அற்புதமான கிரீடம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. [மேலும்]
லசந்த படுகொலை தொடர்பில் இரண்டு இராணுவ உயரதிகாரிகள் கைது
[ செவ்வாய்க்கிழமை, 09 பெப்ரவரி 2010, 03:26.04 AM ]
சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலைச் சம்பவத்துடன் தொடர்படைய சந்தேகத்தின் பேரில் இரண்டு முன்னாள் இராணுவ உயரதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். [மேலும்]
இலங்கையின் பாதுகாப்பிற்கு தொடர்ச்சியாக ஆதரவளிக்கப்படும்: இஸ்ரேல் ஜனாதிபதி
[ செவ்வாய்க்கிழமை, 09 பெப்ரவரி 2010, 03:21.15 AM ]
இலங்கையின் பாதுகாப்பிற்கு தொடர்ச்சியாக ஆதரவளிக்கப்படும் என இஸ்ரேல் ஜனாதிபதி சிமோன் பெரஸ் தெரிவித்துள்ளார். [மேலும்]
வடக்கு கிழக்கிற்கு வழங்கப்பட்ட இயந்திர சாதனங்கள் சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கு...
[ செவ்வாய்க்கிழமை, 09 பெப்ரவரி 2010, 03:14.02 AM ]
வடக்கு கிழக்கு பிரதேசத்தில் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்காக வழங்கப்பட்டிருந்த பாரிய இயந்திர சாதனங்களில் சில சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. [மேலும்]
பேச்சுக்கு அரசு அழைத்தால் அதற்குத் தயார்: தமிழ் தேசிய கூட்டமைப்பு
[ செவ்வாய்க்கிழமை, 09 பெப்ரவரி 2010, 02:43.53 AM ]
இனப் பிரச்சினைத் தீர்வு குறித்துப் பேச்சு நடத்த வருமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அழைப்பு விடுப்பாரானால், அதனைச் சாதகமாகப் பரிசீலிக்கத் தாங்கள் தயார் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. [மேலும்]
சர்வாதிகார ஆட்சியுள் நுழையும் இலங்கை: கனடியத் தமிழர்கள்
[ செவ்வாய்க்கிழமை, 09 பெப்ரவரி 2010, 02:32.34 AM ]
இலங்கையில் ஜனநாயகத்தைக் குழிதோண்டி புதைக்கும் வகையில் அரசிற்கு எதிரான கருத்துக்களைக் கொண்டவர்களை அடக்கும் முறையில் இலங்கையின் முன்னாள் அதிபர் தேர்தல் வேட்பாளரான சரத் பொன்சேகா கொழும்பில் கைது செய்யப்பட்டதற்கு கனடியத் தமிழர்கள் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறார்கள். [மேலும்]
அரசியல் எதிர்க்கட்சியை உடைப்பதே சரத் பொன்சேகாவின் கைதுக்கான நோக்கம்: சர்வதேச மன்னிப்பு சபை
[ செவ்வாய்க்கிழமை, 09 பெப்ரவரி 2010, 01:51.32 AM ]
இலங்கையில் அரசியல் எதிர்கட்சியை உடைப்பதற்கான முதல்படியே சரத் பொன்சேகாவின் கைது நடவடிக்கையாகும் என சர்வதேச மன்னிப்பு சபை குற்றம் சுமத்தியுள்ளது. [மேலும்]
சரத் பொன்சேகா கைதை அடுத்து மக்கள் பொறுமைக்காக்கவேண்டும்: பான் கீ மூன்
[ செவ்வாய்க்கிழமை, 09 பெப்ரவரி 2010, 01:46.39 AM ]
இலங்கையில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டமையை அடுத்து இலங்கையில் உள்ள அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் வன்முறைகளை கையாளக்கூடாது என ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான் கீ மூன் கோரிக்கை விடுத்துள்ளார். [மேலும்]
ரஷ்ய ஜனாதிபதியை ஜனாதிபதி மஹிந்த சந்தித்து கலந்துரையாடினார்.
[ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 08:26.53 PM ] []
ரஷ்யா சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்றையதினம் ரஷ்ய ஜனாதிபதி திமிட்ரீ மெட்வதேவை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார். [மேலும்]
புதிய பாராளுமன்றத்திற்கு மக்கள் சக்தியுடன் மீண்டும் திரும்பி வருவோம்: ஜ.ம.மு. தலைவர் மனோ கணேசன்
[ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 02:00.10 PM ]
எதிர்வரும் புதிய ஏழாவது பாராளுமன்றத்திற்கு மக்கள் சக்தியுடன் தெரிவு செய்யப்படும் ஜனநாயக மக்கள் முன்னணியின் பல பாராளுமன்ற உறுப்பினர்களுடன் மீண்டும் திரும்பி வருவேன் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார். [மேலும்]
பொலிஸாரின் இடமாற்றங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன
[ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 12:32.37 PM ]
இலங்கையில் கடந்த சனிக்கிழமை முதல் அமுலுக்கு வந்த சுமார் 202 பொலிஸாரின் இடமாற்றங்களில் உயர் அதிகாரிகளின் இடமாற்றங்கள் உடனடியாக ரத்துச் செய்யப்பட்டுள்ளன. இந்த ரத்துக்கான உத்தரவை பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச விடுத்துள்ளார். [மேலும்]
இடம்பெயர்ந்தோர் பொதுத்தேர்தலின் பின்னரே மீள்குடியமர்த்தப்படுவர்
[ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 06:56.16 AM ]
இடம்பெயர் முகாம்களில் எஞ்சியுள்ள வன்னி மக்கள் மீளக் குடியமர்த்தப்படும் காலம் மேலும் நீடிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலும் அவர்கள் அனைவரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலின் பின்னரே குடியமர்த்தப்படலாம் என அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. [மேலும்]
தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தவேண்டும்: சித்தார்த்தன் (புளொட்)
[ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 06:35.14 AM ]
இலங்கையின் சிறுபான்மைக் கட்சிகளான தமிழ் தேசிய கூட்டமைப்பும், சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸூம் அரசாங்கத்துடன் பேச்சு நடத்த வேண்டும் என புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். [மேலும்]
(2ம் இணைப்பு)
வித்தியாதரன் மீதான கொலை அச்சுறுத்தலுக்கு எதிராக புலம்பெயர் தமிழ் ஊடகவியலாளர்கள், புத்திஜீவிகள் தெரிவித்துள்ள கருத்துகள்
[ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 06:26.05 AM ]
சுடரொளி பத்திரிகை ஆசிரியர் திரு வித்தியாதரனுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கிசோர் சிவநாதன் கடந்த வாரம் கொலை அச்சுறுத்தலை விடுத்துள்ளமை மிகுந்த வேதனைகளை தோற்றுவித்துள்ளது. இது தொடர்பாக புலம்பெயர் நாடுகளில் வாழும், புத்திஜீவிகளும், ஊடகவியலாளர்களும் பல்வேறு  கருத்துக்கள் தெரிவித்துள்ளனர். [மேலும்]
Sponsor
Advertisements
சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச நீதிமன்றில் சாட்சியளிக்க தயார் : சரத் பொன்சேகா
[ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 04:33.42 PM ]
சிறிலங்கா அரசுக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச நீதிமன்றில் சாட்சியளிக்க தான் தயார் என்று முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா இன்று திங்கட்கிழமை கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அதிரடி அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார். [மேலும்]
முள்ளிவாய்க்காலுடன் முற்றுப்பெறாமல், தொடரும் சிங்களத்தின் தமிழின அழிப்புப் போர்!
[ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 03:39.22 PM ]
முள்ளிவாய்க்காலுடன் முற்றுப்பெறாமல், சிங்கள தேசத்தின் தமிழின அழிப்புப் போர் தொடர்கின்றது. சிறிலங்காவின் அதிபர் தேர்தலுக்காகத் தமிழீழ மக்களுக்கு வழங்கப்பட்டிருந்த உயிர் வாழும் சலுகை தற்போது மீண்டும் பறிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
சரணடைந்த புலிகளை அரச படையினர் சுட்டுக் கொல்லவில்லை என விளக்கமளிக்க சமரசிங்க ஜெனிவா பயணம்
[ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 12:08.13 PM ]
சரணடைந்த தமிழீழ விடுதலைப்புலிகளை சுட்டுக்கொல்லவில்லை என விளக்கமளிப்பதற்காக இலங்கையின் மனித உரிமைகள் துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஜெனீவாவுக்கு பயணமாகியுள்ளார். [மேலும்]
தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து சிறுவர் போராளிகளும் விடுவிக்கப்படுவர்: அரசாங்கம்
[ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 06:37.56 AM ]
தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து சிறுவர் போராளிகளும் எதிர்வரும் மே மாதத்துடன் விடுவிக்கப்படுவர் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை சிறுவர் பாதுகாப்ப அதிகார சபையின் தலைவர் ஜெகத் வெல்லவத்தை தெரிவித்துள்ளார். [மேலும்]
விடுதலைப்புலிச் சந்தேக நபர்கள் இருவரை விசாரிக்க பொலிஸூக்கு நீதிமன்றம் அனுமதி
[ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 03:10.19 AM ]
இலங்கை இராணுவத்தினர் மீது தாக்குதல் மேற்கொள்வதற்குத் தேவையான ஆயுதங்கள் மற்றும் தோட்டாக்கள் ஆகியவற்றை சீனாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவந்த விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவர் மற்றும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான 24 கோடி ரூபா பெறுமதியான.... [மேலும்]
புலம்பெயர் தமிழரை சூறையாட முனையும் சிங்களம்
[ செவ்வாய்க்கிழமை, 09 பெப்ரவரி 2010, 07:04.31 AM ]
ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்த பின்னர் முதன்முதலாக தமிழரின் பண்பாட்டுத் தலைநகரான யாழ்ப்பாணத்திற்குச் சென்ற வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம, அங்கு அரசாங்கம் பல அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்தப் போவதாக அறிவித்தார். அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு புலம்பெயர் தமிழர் தங்களது.......... [மேலும்]
விளம்பரம்