| திணைக்கள, கூட்டுத்தாபன தலைவர்கள் பதவி விலக வேண்டுமென்ற உத்தரவு தொடர்பில் ஐ.தே.க சந்தேகம் |
| [வியாழக்கிழமை, 04 பெப்ரவரி 2010, 04:46 PM] |
திணைக்களங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்களைச் சேர்ந்த தலைவர்கள் பதவி விலக வேண்டுமென்ற அரசாங்கத்தின் உத்தரவு குறித்து ஐக்கிய தேசியக் கட்சி சந்தேகம் வெளியிட்டுள்ளது. [மேலும்] |
| இடம்பெயர் மாணவர்கள் வவுனியாவில் கல்வி கற்க கல்வி பணிப்பாளரினால் அனுமதி மறுப்பு |
| [வியாழக்கிழமை, 04 பெப்ரவரி 2010, 04:42 PM] |
போரினால் இடம்பெயர்ந்து தமது வாழ்வைத் தொலைத்துவிட்டு வவுனியாவின் பல பகுதிகளிலும் வசித்துவரும் மாணவர்களை வவுனியா தெற்கு கல்வி வலயத்தில் கல்விகற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. [மேலும்] |
| காணாமல் போன ஊடகவியலாளர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை |
| [வியாழக்கிழமை, 04 பெப்ரவரி 2010, 03:43 PM] |
கடந்த 24 ஆம் திகதி காணாமல் போன லங்கா இ நியூஸ் இணையத்தளத்தின் செய்தியாளர் பிரகீத் எக்னாலிகொட இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை [மேலும்] |
| தமிழீழத்தின் இதயமாக விளங்கிய கிளிநொச்சி நகரில் இப்போது மக்கள் நடமாட்டம் அற்ற நிலை காணப்படுகிறது. |
[வியாழக்கிழமை, 04 பெப்ரவரி 2010, 02:11 PM] [ ] |
கட்டடங்களோ ஆளரவம் அற்ற பேய்வீடுகளாக உள்ளன. ஆங்காங்கே கைவிடப்பட்ட மாடுகள் கூட்டம் கூட்டமாக நிற்பதைக் காணக்கூடியதாக உள்ளது. இதிலிருந்தே அங்கு நடந்துள்ள இன அழிப்பு நன்கு புலப்படுகிறது. [மேலும்] |
| (3ம் இணைப்பு) |
| இலங்கை வரலாற்றில் அதிஷ்டமுள்ள ஜனாதிபதி நானே : சுதந்திர தின நிகழ்வில் மகிந்த ராஜபக்ஷ |
[வியாழக்கிழமை, 04 பெப்ரவரி 2010, 01:48 PM] [ ] |
இலங்கையின் ஜனாதிபதி வரலாற்றில் அதிஷ்டமுள்ள ஜனாதிபதி நானே என்பதில் பெருமை கொள்கிறேன். அரசியல்வாதிகள் மக்களை ஒரு போதும் தவறான பாதையில் வழிநடத்தக் கூடாது. நான் நாட்டைக் காட்டிக் கொடுப்பதற்கான எந்த முயற்சிகளிலும் ஈடுபடவில்லை. இனியும் அவ்வாறான செயலை செய்ய மாட்டேன்" என இன்று இடம்பெற்றுக் கொண்டிருக்கும் சுதந்திர தின வைபவத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். [மேலும்] |
| ஈழ அகதிகளின் செங்கல்பட்டு முகாமில் நடாத்தப்பட்ட பொலிஸாரின் தாக்குதல் பற்றிய ஆய்வு |
| [வியாழக்கிழமை, 04 பெப்ரவரி 2010, 01:01 PM] |
தமிழகத்தில் இலங்கை அகதிகள் முகாமில் அண்மையில் அதாவது 02 /01 /2010 இல் நடத்தப்பட்ட காட்டு மிராண்டித்தனமாக தாக்குதல் மிகுத்த மன வேதனையை தமிழர்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது. இது தமிழகத்தில் உள்ள செங்கல்பட்டு இலங்கை அகதிகளுக்கான சிறப்பு முகாமில் நடைபெற்ற சம்பவம். [மேலும்] |
| தமிழ்நாட்டுக்கு ஒப்பான ஒரு தாயகத்தை ஈழத்தமிழினம் காண விரும்புகின்றது: கருணாநிதியிடம் உ.த.ப. இயக்கம் விண்ணப்பம் |
| [வியாழக்கிழமை, 04 பெப்ரவரி 2010, 12:20 PM] |
உங்கள் காலத்திலேயே தமிழ்நாட்டுக்கு ஒப்பான ஒரு தமிழ்ர் தாயகத்தை ஈழத்தமிழினம் காண விரும்புகின்றது. இவ்வாறு உலகத் தமிழ் பண்பாட்டு இயகத்தின் தலைமை அலுவலகம் தமிழக முதல்வர் கலைஞர் மு. கருணாநிதிக்கு அனுப்பி வைத்துள்ள விண்ணப்பம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. [மேலும்] |
| கோவை உலகத் தமிழ் மாநாட்டிற்கு முன்னர் நளினி விடுதலை? |
| [வியாழக்கிழமை, 04 பெப்ரவரி 2010, 10:51 AM] |
அறிவுரைக் குழுவின் பரிந்துரையில் நளினி விடுதலைக்கு சாதகமாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. கோவையில் நடைபெறவுள்ள உலக தமிழர் மாநாட்டுக்கு முன்பு நளினி விடுதலை செய்யப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் பரிந்துரை அறிக்கையில் என்ன தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது உறுதியாக தெரியவில்லை. [மேலும்] |
| யாழ். பலாலி விமானத்தளத்தை சீர்படுத்திக் கொடுக்க இந்தியா ஒப்புதல்: இந்திய தூதுவர் காந்தா |
| [வியாழக்கிழமை, 04 பெப்ரவரி 2010, 10:24 AM] |
இலங்கையில் வடபகுதியில் உள்ள பலாலி விமானத்தளத்தை சீர்படுத்தி, மேம்படுத்தித் கொடுக்க இந்தியா முடிவு செய்துள்ளதாம். அதேபோல இலங்கையில் உள்ள துறைமுகங்களை மறு சீரமைத்துத் தரவும் அது ஒப்புக் கொண்டுள்ளதாக இலங்கைக்கான இந்தியத் தூதர் அசோக் காந்தா தெரிவித்துள்ளார். [மேலும்] |
| சுதந்திர தினத்தை முன்னிட்டு 1,753 கைதிகள் விடுதலை |
| [வியாழக்கிழமை, 04 பெப்ரவரி 2010, 09:43 AM] |
இலங்கையின் 62 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் 1,753 சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன. [மேலும்] |
| யாழ் மாவட்ட வாக்காளர் பட்டியல் குழப்பநிலை: தோ்தல்கள் ஆணையாளர் விளக்கம் |
| [வியாழக்கிழமை, 04 பெப்ரவரி 2010, 04:48 AM] |
யாழ்ப்பாண மாவட்ட வாக்காளர் பட்டியலில் பதிவாகியுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அங்கு வாக்காளர்கள் வதிவிடமாக இல்லை என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தயானந்த திஸாநாயக்க தெரிவித்தார். [மேலும்] |
| யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பஸ்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு |
| [வியாழக்கிழமை, 04 பெப்ரவரி 2010, 04:33 AM] |
யாழ். மாவட்டம் கொழும்புத்துறை பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். [மேலும்] |
| வடக்கு கிழக்கு மீள் குடியேற்ற நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா மூன்று மில்லியன் நிதி உதவி |
| [வியாழக்கிழமை, 04 பெப்ரவரி 2010, 04:08 AM] |
வடக்கு கிழக்கு மீள் குடியேற்ற நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா மூன்று மில்லியன் நிதி உதவி வழங்கத் தீர்மானித்துள்ளதென லக்பிம பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்] |
| பொன்சேகாவின் சூழ்ச்சித் திட்டம் குறித்து விசாரணை நடாத்த ஜெனரல் சூலா செனவிரட்ன நியமனம் |
| [வியாழக்கிழமை, 04 பெப்ரவரி 2010, 04:03 AM] |
ஜனவரி 27ம் திகதி அரசாங்கத்தை கவிழ்க்கும் நோக்கில் சரத் பொன்சேகாவினால் மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சித் திட்டம் தொடர்பில் விசாரணை நடத்த முன்னாள் ஜெனரல் சூலா செனவிரட்ன நியமிக்கப்பட்டுள்ளார். [மேலும்] |
| 17 ஆவது திருத்தச் சட்ட மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையாது : தேர்தல் ஆணையாளர் |
| [வியாழக்கிழமை, 04 பெப்ரவரி 2010, 03:56 AM] |
17 ஆவது திருத்தச் சட்ட மூலம் இலங்கையின் இனப்பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையாதென தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். [மேலும்] |
| இலங்கை ஜனாதிபதி தேர்தலின் பின்னர் இந்தியாவின் நிலைப்பாடு: இந்திய செய்திதாள்களின் கருத்துக்கள் |
| [வியாழக்கிழமை, 04 பெப்ரவரி 2010, 03:19 AM] |
இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ச மீண்டும் தெரிவானமையை அடுத்து அங்கு ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமைகளை இந்தியா கவனமாக ஆராய்ந்து வருவதாக இந்திய தரப்புகள் தெரிவிக்கின்றன. அதேவேளை இந்திய நிலைப்பாடு குறித்து செய்தித்தாள்கள் பல்வேறு கலப்புக் கருத்துக்களை முன்வைத்துள்ளன. [மேலும்] |
| இலங்கைக்கு சுதந்திர நாள்! தமிழர்களுக்கு கரி நாள்! : பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பு |
[வியாழக்கிழமை, 04 பெப்ரவரி 2010, 02:54 AM] [ ] |
1948ம் ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி, ஈழத் தமிழினத்தின் இறைமையைப் பறித்து, பௌத்த-சிங்கள பேரினவாதத்தின் கைகளில் பிரிட்டன் தாரை வார்த்த இருண்ட நாள். இந்த நாள், பௌத்த-சிங்கள பேரினவாத நாட்டின் 62 ஆவது ஆண்டு சுதந்திர நாள். தமிழ் மக்களுக்கு இது 62 ஆண்டு கால அடக்குமுறை வாழ்வு. இந்த நாளை கறுப்பு நாளாக..... [மேலும்] |
| பத்திரிகையாளர் வித்தியாதரனுக்கு கிஷோர் எம்.பி. கொலை மிரட்டல் |
| [வியாழக்கிழமை, 04 பெப்ரவரி 2010, 02:26 AM] |
"சுடர் ஒளி" பத்திரிகைகளின் ஆசிரியர் வித்தியாதரனுக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் நேற்று மாலை தொலைபேசி மூலம் கொலை அச்சுறுத்தல் விடுத்திருக்கின்றார். [மேலும்] |
| அதிகாரப் பகிர்வு உறுதிமொழியை இலங்கை அரசு நிறைவேற்ற வேண்டும்: முதல்வர் கருணாநிதி |
| [வியாழக்கிழமை, 04 பெப்ரவரி 2010, 02:06 AM] |
இலங்கையில் தமிழ் மக்களுக்கான அதிகார பகிர்வு குறித்து இலங்கை அரசு முன்னர் அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்ற வேண்டும் என திமுக கோரியுள்ளதாக திமுகவின் தலைவரும் தமிழக முதல்வருமான கருணாநிதி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். . [மேலும்] |