Switch to
செய்திகள் 2010-02-08
ரஷ்ய ஜனாதிபதியை ஜனாதிபதி மஹிந்த சந்தித்து கலந்துரையாடினார்.
[திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 08:26 PM] []
ரஷ்யா சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்றையதினம் ரஷ்ய ஜனாதிபதி திமிட்ரீ மெட்வதேவை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார். [மேலும்]
(4ம் இணைப்பு)
ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவ காவல்துறையினரால் கைது
[திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 04:45 PM] []
இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனாதிபதி வேட்பாளருமான ஜெனரல் சரத் பொன்சேகா சற்று நேரத்திற்கு முன்னர் இராணுவ காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார். [மேலும்]
சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச நீதிமன்றில் சாட்சியளிக்க தயார் : சரத் பொன்சேகா
[திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 04:33 PM]
சிறிலங்கா அரசுக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச நீதிமன்றில் சாட்சியளிக்க தான் தயார் என்று முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா இன்று திங்கட்கிழமை கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அதிரடி அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார். [மேலும்]
முள்ளிவாய்க்காலுடன் முற்றுப்பெறாமல், தொடரும் சிங்களத்தின் தமிழின அழிப்புப் போர்!
[திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 03:39 PM]
முள்ளிவாய்க்காலுடன் முற்றுப்பெறாமல், சிங்கள தேசத்தின் தமிழின அழிப்புப் போர் தொடர்கின்றது. சிறிலங்காவின் அதிபர் தேர்தலுக்காகத் தமிழீழ மக்களுக்கு வழங்கப்பட்டிருந்த உயிர் வாழும் சலுகை தற்போது மீண்டும் பறிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
புதிய பாராளுமன்றத்திற்கு மக்கள் சக்தியுடன் மீண்டும் திரும்பி வருவோம்: ஜ.ம.மு. தலைவர் மனோ கணேசன்
[திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 02:00 PM]
எதிர்வரும் புதிய ஏழாவது பாராளுமன்றத்திற்கு மக்கள் சக்தியுடன் தெரிவு செய்யப்படும் ஜனநாயக மக்கள் முன்னணியின் பல பாராளுமன்ற உறுப்பினர்களுடன் மீண்டும் திரும்பி வருவேன் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார். [மேலும்]
பொலிஸாரின் இடமாற்றங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன
[திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 12:32 PM]
இலங்கையில் கடந்த சனிக்கிழமை முதல் அமுலுக்கு வந்த சுமார் 202 பொலிஸாரின் இடமாற்றங்களில் உயர் அதிகாரிகளின் இடமாற்றங்கள் உடனடியாக ரத்துச் செய்யப்பட்டுள்ளன. இந்த ரத்துக்கான உத்தரவை பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச விடுத்துள்ளார். [மேலும்]
சரணடைந்த புலிகளை அரச படையினர் சுட்டுக் கொல்லவில்லை என விளக்கமளிக்க சமரசிங்க ஜெனிவா பயணம்
[திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 12:08 PM]
சரணடைந்த தமிழீழ விடுதலைப்புலிகளை சுட்டுக்கொல்லவில்லை என விளக்கமளிப்பதற்காக இலங்கையின் மனித உரிமைகள் துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஜெனீவாவுக்கு பயணமாகியுள்ளார். [மேலும்]
இடம்பெயர்ந்தோர் பொதுத்தேர்தலின் பின்னரே மீள்குடியமர்த்தப்படுவர்
[திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 06:56 AM]
இடம்பெயர் முகாம்களில் எஞ்சியுள்ள வன்னி மக்கள் மீளக் குடியமர்த்தப்படும் காலம் மேலும் நீடிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலும் அவர்கள் அனைவரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலின் பின்னரே குடியமர்த்தப்படலாம் என அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. [மேலும்]
தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து சிறுவர் போராளிகளும் விடுவிக்கப்படுவர்: அரசாங்கம்
[திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 06:37 AM]
தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து சிறுவர் போராளிகளும் எதிர்வரும் மே மாதத்துடன் விடுவிக்கப்படுவர் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை சிறுவர் பாதுகாப்ப அதிகார சபையின் தலைவர் ஜெகத் வெல்லவத்தை தெரிவித்துள்ளார். [மேலும்]
தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தவேண்டும்: சித்தார்த்தன் (புளொட்)
[திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 06:35 AM]
இலங்கையின் சிறுபான்மைக் கட்சிகளான தமிழ் தேசிய கூட்டமைப்பும், சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸூம் அரசாங்கத்துடன் பேச்சு நடத்த வேண்டும் என புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். [மேலும்]
(2ம் இணைப்பு)
வித்தியாதரன் மீதான கொலை அச்சுறுத்தலுக்கு எதிராக புலம்பெயர் தமிழ் ஊடகவியலாளர்கள், புத்திஜீவிகள் தெரிவித்துள்ள கருத்துகள்
[திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 06:26 AM]

சுடரொளி பத்திரிகை ஆசிரியர் திரு வித்தியாதரனுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கிசோர் சிவநாதன் கடந்த வாரம் கொலை அச்சுறுத்தலை விடுத்துள்ளமை மிகுந்த வேதனைகளை தோற்றுவித்துள்ளது. இது தொடர்பாக புலம்பெயர் நாடுகளில் வாழும், புத்திஜீவிகளும், ஊடகவியலாளர்களும் பல்வேறு  கருத்துக்கள் தெரிவித்துள்ளனர். [மேலும்]

சரத் பொன்சேகாவுடன் இருந்த ஊடகவியலாளர்கள் மீது விசாரணை
[திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 06:22 AM]
சரத் பொன்சேகா தேர்தல் தினத்தின் மறுநாள் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஹோட்டலுக்கு சென்ற ஊடகவியலாளர்கள் மீது  விசாரணை நடத்த அரசாங்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். [மேலும்]
ஜனாதிபதிக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் நோக்கில் சில சக்திகள் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்
[திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 04:13 AM]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் சில சக்திகள் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதாக புனிதி இளைஞர் அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரதனஜோதி தேரர் தெரிவித்துள்ளார். [மேலும்]
மக்கள் மத்தியில் செல்லும் பொலிஸார் ஆயுதங்களை எடுத்துச் செல்லத் தடை
[திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 04:10 AM]
மக்கள் மத்தியில் செல்லும் பொலிஸார் ஆயுதங்களை எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதம் இல்லாது ஒழிக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் ஆயுதங்களை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
நீதவான்கள் சமநிலையைப் பேணுவது மிகவும் இன்றியமையாதது: முன்னாள் பிரதம நீதியரசர்
[திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 04:05 AM]

நீதவான்கள் சமநிலையைப் பேணுவது மிகவும் இன்றியமையாதது எனவும்,  மக்களுக்கு நியாயமான தீர்ப்பு கிடைக்காவிட்டால் அவர்கள் அதிருப்தியுடன் நீதிமன்றத்தை விட்டு வெளியேறுவார்கள் எனவும் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா குறிப்பிட்டுள்ளார். [மேலும்]

நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் கட்சியுடன் இணைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சி: லக்பிம
[திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 04:00 AM]
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் கட்சியுடன் இணைந்து போட்டியிட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முனைப்பு காட்டி வருவதாக லக்பிம பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்]
ஜனாதிபதித் தேர்தலில் அரசியலில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி நீக்கம் செய்யப்படவுள்ளனர்
[திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 03:52 AM]
நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் போது அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி நீக்கம் செய்யப்படவுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். [மேலும்]
ஜி எஸ் பி வரிச்சலுகையை மீண்டும் பெற்றுக்கொள்ளமுடியும்: இலங்கை அரசாங்கம்
[திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 03:38 AM]
நீக்கப்பட்ட ஜீ எஸ் பி பிளஸ் வரிச்சலுகை மீண்டும் இலங்கைக்கு கிடைக்கும் வாய்ப்பு காணப்படுவதாக புதிய அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரசல்ஸின் இலங்கை தூதுவர் ரவிநாத் ஆரியசிங்கவை மேற்கோள் காட்டிய ஊடக அறிக்கை ஒன்றில் இந்த செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
இலங்கையுடனான கூட்டு கடல் பாதுகாப்பை இந்தியா விலக்கவில்லை: மு.க.ஸ்டாலின்
[திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 03:30 AM]
இலங்கையுடனான கடல் எல்லை பாதுகாப்பு தீவிரத்தன்மையை இந்திய மத்திய அரசாங்கம் முழுமையாக விலக்கிக் கொள்ளவில்லை என தமிழக துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். [மேலும்]
விடுதலைப்புலிச் சந்தேக நபர்கள் இருவரை விசாரிக்க பொலிஸூக்கு நீதிமன்றம் அனுமதி
[திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 03:10 AM]
இலங்கை இராணுவத்தினர் மீது தாக்குதல் மேற்கொள்வதற்குத் தேவையான ஆயுதங்கள் மற்றும் தோட்டாக்கள் ஆகியவற்றை சீனாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவந்த விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவர் மற்றும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான 24 கோடி ரூபா பெறுமதியான.... [மேலும்]
தமிழ் மக்களின் பிரச்சினைகள் என்னவென்பதை அரசாங்கம் சிங்கள மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்: பா.உ. துரைரெட்ணசிங்கம்
[திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 02:31 AM]
ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மை இன மக்கள் ஏன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்கவில்லை என்பதை அரசாங்கம் மீளாய்வு செய்து அதற்கான பரிகாரத்தை மேற்கொள்ள வேண்டுமென திருகோணமலை மாவட்ட பா.உ. துரைரெட்ணசிங்கம் தெரிவித்தார்.  [மேலும்]
வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் மாணவ விசாக்களின் தொகையை குறைக்க பிரிட்டன் முடிவு
[திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 01:59 AM]
வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் மாணவ விசாக்கள் பிட்டனில் துஷ்பிரயோகம் செய்யப்படுவதால் அத்தகைய விசாக்களின் எண்ணிக்கையை குறைப்பதென பிரிட்டன் முடிவு செய்துள்ளது என்று உள்துறை அமைச்சர் அலன் ஜோன்ஸன் தெரிவித்துள்ளார். இரண்டு வாரத்திற்குள் இப்புதிய கட்டுப்பாடுகள் அமுலுக்கு வரவிருக்கின்றன.

[மேலும்]
Sponsor
Advertisements
உலக தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள மாநாட்டு அறிக்கை
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 11:03.36 AM ]
உலக தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் ஐரோப்பிய ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ள அகம் புலம் தமிழர் வாழ்வியல் மகாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மகாநாட்டு அமைப்பாளரும், ஐரோப்பிய ஒன்றியத்தலைவருமான துரை கணேசலிங்கம், மகாநாட்டு செயலாளருமான ப.பரமேஷ்வரன் ஆகியோர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள சிறப்பறிக்கை. [மேலும்]
கருத்துக்கூறினால் தமக்கு வெள்ளை வாகனம் அனுப்பப்படலாம் : சந்திரிகா பண்டாரநாயக்க
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 06:49.28 AM ]
18 வது அரசியலமைப்பு சீர்திருத்தம், இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் பயங்கரமான முயற்சி என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். [மேலும்]
சன் சீ கப்பல் இலங்கை அகதிகள் அனைவருக்கும் கனடாவில் புகலிடம் வழங்கக் கூடிய சாத்தியம்
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 06:15.13 AM ]
கனடாவிற்கு எம்.வி சன் சீ கப்பல் மூலம் சென்ற 492 இலங்கை தமிழ் அகதிகளுக்கும் அந்த நாட்டில் புகலிடம் அந்தஸ்து வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. [மேலும்]
(3ம் இணைப்பு)
நஞ்சருந்தி மயக்கமடைந்த நிலையில் காதல் ஜோடி மீட்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 04:45.49 AM ]
நஞ்சருந்தி தற்கொலைக்கு முயற்சித்த நிலையின் மயக்கமுற்றிருந்த காதல்ஜோடியொன்றை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த சம்பவமொன்று திருக்கோவில் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. [மேலும்]
வடக்கு கிழக்கு பகுதிகளில் இந்தியத் தலைவர்களின் பயணங்களின் மர்மம் என்ன?
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 01:36.33 AM ]
தமிழ் மக்கள் செறிந்து வாழும் வடக்கு கிழக்குப் பகுதிகள் அண்மைக்காலமாக அழையாத விருந்தாளிகளால் அமர்க்களப்பட்டு வருகின்றது. பல அமைச்சர்கள், இராஜதந்திரிகள் தற்போதும் வடபகுதிக்குப் பயணங்களை மேற்கொண்டு வந்தாலும், இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபாமா ராவின் பயணத்திற்கு இந்திய, இலங்கை ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்திருந்தன. [மேலும்]
தமிழின உயிர்கொலை நாள்- செப்டம்பர் 5 : கிழக்கு பல்கலைக்கழக அகதிமுகாம் படுகொலையின் 20ஆண்டு நினைவு நாள் இன்று - இரா.துரைரத்தினம்
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 12:24.36 PM ] []
ஓகஸ்ட் செப்டம்பர் மாதங்கள் கிழக்கு மாகாண மக்களைப் பொறுத்தவரை அவர்களின் வாழ்வில் மறக்க முடியாத துன்பங்களையும் இழப்புக்களையும் கொடுத்த மாதங்கள். 1990ஆம் ஆண்டு யூன் மாதம் விடுதலைப்புலிகளுக்கும் ஸ்ரீலங்கா படைகளுக்கும் இடையில் போர் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து மட்டக்களப்பு அம்பாறை பிரதேசங்களை ஸ்ரீலங்கா படைகள்..... [மேலும்]
விளம்பரம்
advertisement