| இலங்கை நாடாளுமன்றம் இன்று இரவு கலைக்கப்பட்டுள்ளது |
| [செவ்வாய்க்கிழமை, 09 பெப்ரவரி 2010, 03:33 PM] |
இலங்கையின் 6 வது நாடாளுமன்றம் இன்று நள்ளிரவு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் கலைப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. [மேலும்] |
| சரத் பொன்சேகாவை பார்வையிட அவரது மனைவிக்கு அனுமதி: இராணுவம் அறிவிப்பு |
[செவ்வாய்க்கிழமை, 09 பெப்ரவரி 2010, 02:21 PM] [ ] |
எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவை பார்வையிட அவரது மனைவிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது. [மேலும்] |
| இந்திய விஜயத்தை இடைநடுவில் ரத்து செய்து ரணில் நாடு திரும்பவுள்ளார் |
| [செவ்வாய்க்கிழமை, 09 பெப்ரவரி 2010, 02:16 PM] |
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, தனது இந்திய விஜயத்தை இடை நடுவில் ரத்து செய்துவிட்டு நாடு திரும்பவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] |
| சரத் பொன்சேகாவுக்கு பலத்த பாதுகாப்பு! : இராணுவ பேச்சாளர் பிரசாத் சமரசிங்க |
| [செவ்வாய்க்கிழமை, 09 பெப்ரவரி 2010, 01:46 PM] |
இராணுவப் பொலிஸாரால் நேற்று இரவு கைது செய்யப்பட்ட ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், அவரது குடும்பத்தினர் சென்று சந்திக்கும் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவ ஊடகப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார். [மேலும்] |
| மஹிந்த ராஜபக்சவின் மற்றும் ஒரு குடும்ப அங்கத்தவர் அரசியலில் இணைகிறார் |
| [செவ்வாய்க்கிழமை, 09 பெப்ரவரி 2010, 01:21 PM] |
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மூத்த மகன் நாமல் ராஜபக்ச எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கான விண்ணப்பத்தை இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் தெரிவுக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளார். [மேலும்] |
| சரத் பொன்சேகாவின் கைதை கண்டித்து நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்கள் |
| [செவ்வாய்க்கிழமை, 09 பெப்ரவரி 2010, 01:09 PM] |
முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா கைதுசெய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை புதன்கிழமை எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டங்களை நடத்தவுள்ளன. நாடு முழுவதிலும் முக்கிய நகரங்களில் இவ்வாறான போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. [மேலும்] |
| கைதிகளை சித்திரவதை செய்யும் பொலிஸாரின் செயல்களில் மாற்றம் இல்லை: மனித உரிமைகள் ஆணைக்குழு |
| [செவ்வாய்க்கிழமை, 09 பெப்ரவரி 2010, 01:02 PM] |
 இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை பொலிஸார் சித்திரவதை செய்யும் நடவடிக்கைகளில் இன்னும் மாற்றம் ஏற்படவில்லை என மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. [மேலும்] |
| மகிந்த, கோத்தபாய, ரணில்,மங்கள ஆகியோர் வெளிநாடு சென்றிருந்த வேளையில் பொன்சேகா கைது! |
| [செவ்வாய்க்கிழமை, 09 பெப்ரவரி 2010, 11:28 AM] |
இலங்கையின் முக்கிய தலைவர்களான, ஜனாதிபதி மகிந்த, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் உத்தியோகபூர்வ மற்றும் தனிப்பட்ட விஜயங்களை மேற்கொண்டு வெளிநாடு சென்றிருந்த வேளையில் சரத் பொன்சேகாவின் கைது இடம்பெற்றிருக்கிறது. [மேலும்] |
| (3ம் இணைப்பு) |
| எனது கணவர் கைதாகவில்லை, கடத்தப்பட்டுள்ளார்! கண்டுபிடிக்க உலக சமுதாயம் உதவ வேண்டும்: அனோமா பொன்சேகா |
[செவ்வாய்க்கிழமை, 09 பெப்ரவரி 2010, 11:04 AM] [ ] |
எனது கணவர் கைது செய்யப்படவில்லை, கடத்தப்பட்டிருக்கிறார். ''முப்பது வருடகால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்த இராணுவத் தளபதி ஒருவருக்கு அரசாங்கம் கொடுத்துள்ள சிறந்த பரிசு இது" என்று திருமதி அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார். [மேலும்] |
| புலம்பெயர் தமிழரை சூறையாட முனையும் சிங்களம் |
| [செவ்வாய்க்கிழமை, 09 பெப்ரவரி 2010, 07:04 AM] |
ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்த பின்னர் முதன்முதலாக தமிழரின் பண்பாட்டுத் தலைநகரான யாழ்ப்பாணத்திற்குச் சென்ற வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம, அங்கு அரசாங்கம் பல அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்தப் போவதாக அறிவித்தார். அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு புலம்பெயர் தமிழர் தங்களது.......... [மேலும்] |
| உலகப் பொருளாதார நெருக்கடியின் காரணமாக 60000 இலங்கையர் வேலை வாய்ப்பு இழப்பு |
| [செவ்வாய்க்கிழமை, 09 பெப்ரவரி 2010, 03:59 AM] |
உலகப் பொருளாதார நெருக்கடியின் காரணமாக சுமார் 60000 இலங்கையர்கள் வேலை வாய்ப்புக்களை இழந்துள்ளதாக அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வுத் தகவலொன்று சுட்டிக்காட்டுகின்றது. [மேலும்] |
| மகிந்தவிற்கு ரஷ்யாவில் தங்கக் கிரீடம் வழங்கி கௌரவம் |
| [செவ்வாய்க்கிழமை, 09 பெப்ரவரி 2010, 03:49 AM] |
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச யுத்தத்தின் போது மேற்கொண்ட சேவைகளை கௌரவிக்கும் வகையில் ரஷ்யாவில் தங்கத்திலான அற்புதமான கிரீடம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. [மேலும்] |
| சரத் பொன்சேகாவுக்கு இராணுவச்சட்டப்படி ஆயுள் தண்டனை வழங்கப்படலாம் |
[செவ்வாய்க்கிழமை, 09 பெப்ரவரி 2010, 03:30 AM] [ ] |
 கைதுசெய்யப்பட்டுள்ள முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவருக்கு இராணுவ நீதிமன்றத்தினால், ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. [மேலும்] |
| லசந்த படுகொலை தொடர்பில் இரண்டு இராணுவ உயரதிகாரிகள் கைது |
| [செவ்வாய்க்கிழமை, 09 பெப்ரவரி 2010, 03:26 AM] |
சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலைச் சம்பவத்துடன் தொடர்படைய சந்தேகத்தின் பேரில் இரண்டு முன்னாள் இராணுவ உயரதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். [மேலும்] |
| இலங்கையின் பாதுகாப்பிற்கு தொடர்ச்சியாக ஆதரவளிக்கப்படும்: இஸ்ரேல் ஜனாதிபதி |
| [செவ்வாய்க்கிழமை, 09 பெப்ரவரி 2010, 03:21 AM] |
இலங்கையின் பாதுகாப்பிற்கு தொடர்ச்சியாக ஆதரவளிக்கப்படும் என இஸ்ரேல் ஜனாதிபதி சிமோன் பெரஸ் தெரிவித்துள்ளார். [மேலும்] |
| வடக்கு கிழக்கிற்கு வழங்கப்பட்ட இயந்திர சாதனங்கள் சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கு... |
| [செவ்வாய்க்கிழமை, 09 பெப்ரவரி 2010, 03:14 AM] |
வடக்கு கிழக்கு பிரதேசத்தில் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்காக வழங்கப்பட்டிருந்த பாரிய இயந்திர சாதனங்களில் சில சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. [மேலும்] |
| பேச்சுக்கு அரசு அழைத்தால் அதற்குத் தயார்: தமிழ் தேசிய கூட்டமைப்பு |
| [செவ்வாய்க்கிழமை, 09 பெப்ரவரி 2010, 02:43 AM] |
இனப் பிரச்சினைத் தீர்வு குறித்துப் பேச்சு நடத்த வருமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அழைப்பு விடுப்பாரானால், அதனைச் சாதகமாகப் பரிசீலிக்கத் தாங்கள் தயார் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. [மேலும்] |
| சர்வாதிகார ஆட்சியுள் நுழையும் இலங்கை: கனடியத் தமிழர்கள் |
| [செவ்வாய்க்கிழமை, 09 பெப்ரவரி 2010, 02:32 AM] |
இலங்கையில் ஜனநாயகத்தைக் குழிதோண்டி புதைக்கும் வகையில் அரசிற்கு எதிரான கருத்துக்களைக் கொண்டவர்களை அடக்கும் முறையில் இலங்கையின் முன்னாள் அதிபர் தேர்தல் வேட்பாளரான சரத் பொன்சேகா கொழும்பில் கைது செய்யப்பட்டதற்கு கனடியத் தமிழர்கள் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறார்கள். [மேலும்] |
| அரசியல் எதிர்க்கட்சியை உடைப்பதே சரத் பொன்சேகாவின் கைதுக்கான நோக்கம்: சர்வதேச மன்னிப்பு சபை |
| [செவ்வாய்க்கிழமை, 09 பெப்ரவரி 2010, 01:51 AM] |
இலங்கையில் அரசியல் எதிர்கட்சியை உடைப்பதற்கான முதல்படியே சரத் பொன்சேகாவின் கைது நடவடிக்கையாகும் என சர்வதேச மன்னிப்பு சபை குற்றம் சுமத்தியுள்ளது. [மேலும்] |
| சரத் பொன்சேகா கைதை அடுத்து மக்கள் பொறுமைக்காக்கவேண்டும்: பான் கீ மூன் |
| [செவ்வாய்க்கிழமை, 09 பெப்ரவரி 2010, 01:46 AM] |
இலங்கையில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டமையை அடுத்து இலங்கையில் உள்ள அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் வன்முறைகளை கையாளக்கூடாது என ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான் கீ மூன் கோரிக்கை விடுத்துள்ளார். [மேலும்] |
| சரத் பொன்சேகாவின் கைது சமூகத்தில் பிளவுகளை ஏற்படுத்தும்: அமெரிக்கா எச்சரிக்கை |
| [செவ்வாய்க்கிழமை, 09 பெப்ரவரி 2010, 01:41 AM] |
முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவின் கைது, இலங்கையில் யுத்த மீட்சிக்கு பின்னர் பாரிய பிளவுகளுக்கு வழியை ஏற்படுத்திவிடும் என அமெரிக்கா அச்சம் வெளியிட்டுள்ளது. [மேலும்] |