Switch to
செய்திகள் 2010-02-03
என்மேல் குற்றம் என்று நிரூபித்தால் தீக்குளிக்கவும் தயார்: பரமேஸ்வரன்
[புதன்கிழமை, 03 பெப்ரவரி 2010, 08:26 PM] []
என் மீது குறைகூறுபவர்கள் குற்றத்தை நிரூபித்தால் தீக்குளிக்கவும் தயார் எனப் பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார் [மேலும்]
இரகசியப் பொலிஸாரின் நடவடிக்கைகளினால் அப்பாவிகள் பாதிக்கப்படுகின்றனர்: கல்கிஸை நீதிவான்
[புதன்கிழமை, 03 பெப்ரவரி 2010, 04:44 PM]
இலங்கையில், இரகசிய பொலிஸார் நீதிமன்றத்தை தவறான வழியில் இட்டுசெல்லக்கூடாது என கல்கிஸ்ஸை நீதிவான் இன்று எச்சரிக்கை விடுத்தார். அப்பாவிகளை கைது செய்வதையும், குற்றவாளிகளை சுதந்திரமாக நடமாட விடும் நடவடிக்கைகளையும் இரகசிய பொலிஸார் நிறுத்திக்கொள்ள வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். [மேலும்]
அரச நிறுவனங்களின் தலைவர்களை பதவி விலகுமாறு ஜனாதிபதி பணிப்பு
[புதன்கிழமை, 03 பெப்ரவரி 2010, 04:36 PM]
இலங்கையின் நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள் சிலர் கடந்த சில நாட்களில் பதவி விலகிமையை தொடர்ந்து, அனைத்து அரச நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்களை தாமாகவே பதவி விலகுமாறு ஜனாதிபதி பணித்துள்ளார்.  [மேலும்]
ஊடகவியலாளர் ஸ்ரீரங்கா கலந்து கொண்ட கூட்டத்தில் கைகலப்பு
[புதன்கிழமை, 03 பெப்ரவரி 2010, 04:04 PM]
இலங்கையின் சக்தி தொலைக்காட்சி நிறுவனத்தின் ஊடகவியலாளர் ஸ்ரீரங்கா கலந்து கொண்ட கூட்டத்தின் போது கைகலப்பு ஏற்பட்டுள்ளதாக குறித்த தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்]
மோசடித் தேர்தலுக்காக ஜனாதிபதிக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும்: மனோ கணேசன்
[புதன்கிழமை, 03 பெப்ரவரி 2010, 02:48 PM]
இலங்கை வரலாற்றிலேயே எப்போதும் இடம்பெற்றிராத வகையில் மிக மோசமான தேர்தலை நடத்திய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு மோசடித் தேர்தலுக்கான நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார். [மேலும்]
கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் எதிரணி ஆர்ப்பாட்டம்
[புதன்கிழமை, 03 பெப்ரவரி 2010, 02:40 PM]
ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆர்ப்பாட்டத்தில் சுமார் 10ஆயிரம் பேர் வரை கலந்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]
செங்கல்பட்டு முகாம் உண்ணாவிரதிகள் மீது பொலிஸார் நடத்திய தாக்குதலை கண்டிக்கின்றேன்: பழ. நெடுமாறன்
[புதன்கிழமை, 03 பெப்ரவரி 2010, 01:55 PM]

செங்கல்பட்டு ஈழத்தமிழ் அகதிகள் முகாமில் அப்பாவிகள் மீது கருணாநிதியின் கட்டுப்பாட்டில் உள்ள போலீசார் கொடூரமாக நடத்திய தாக்குதல் முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவுபடுத்துகிறது என்று பழ.நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார். [மேலும்]

விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்திய அரசு நீக்க வேண்டும்: மலேசிய தமிழ் எம்.பி. குணாளன் கோரிக்கை
[புதன்கிழமை, 03 பெப்ரவரி 2010, 01:14 PM]
'தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீது மலேசிய அரசு எந்தவிதமான தடையும் விதிக்கவில்லை. அதுபோல இந்தியாவிலும் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என அரசை நாங்கள் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்' என மலேசிய தமிழ் எம்.பி குணாளன் கேட்டுக் கொண்டுள்ளார். [மேலும்]
தனிப்பாதையில் பயணிப்பதை இரா.சம்பந்தன் அவர்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும்!
[புதன்கிழமை, 03 பெப்ரவரி 2010, 01:03 PM]
இலங்கையின் அச்சுறுத்தல்களுக்கும், இந்தியாவின் அழுத்தங்களுக்கும் முகம்கொடுத்துத் திணறிக்கொண்டுள்ள த.தே.கூட்டமைப்பு புலம்பெயர் தமிழர்களின் பலத்தினூடாக அதனைத் தகர்க்க முன்வர வேண்டும்.  புலம்பெயர் தமிழர்களின் அரசியல் விருப்புக்களைக் கணக்கில் எடுக்காமல் தனிப்பாதையில் பயணிப்பதை மூத்த தலைவரான சம்பந்தன் அவர்கள் மறு பரிசீலனை செய்ய வேண்டும். [மேலும்]
தடுப்புக்காவலில் உள்ள புலிச் சந்தேகநபர்களை இலங்கை அரசு விடுதலை செய்யவேண்டும்: மனித உரிமைகள் கண்காணிப்பகம்
[புதன்கிழமை, 03 பெப்ரவரி 2010, 11:47 AM]
தடுப்புக்காவலில் உள்ள விடுதலைப்புலிகள் என சந்தேகிக்கப்படுவோரை இலங்கை அரசு காலவரையறையின்றி தடுத்து வைப்பதை நிறுத்த வேண்டும். அவர்களில் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவர்களை கண்டறிந்த பின்னர் ஏனையவர்களை விடுதலை செய்ய வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. [மேலும்]
ஜனாதிபதி தோ்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் பரப்பப்பட்ட செய்திகளில் உண்மையில்லை: தயானந்த திஸாநாயக்க
[புதன்கிழமை, 03 பெப்ரவரி 2010, 07:16 AM]

தாம் துப்பாக்கி முனையில் பெறுபேறுகளில் கையொப்பமிட்டதாகவும், தேர்தல் பெறுபேறுகள் வெளியிடப்படும் போது தாம் தேர்தல்கள் செயலகத்தில் இருக்கவில்லையென்றும், வெளியாகியதாக செய்திகளில் உண்மையில்லை என தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
[மேலும்]

இராஜினாமா செய்யப் போவதில்லை என தேர்தல் ஆணையாளர் தெரிவிப்பு
[புதன்கிழமை, 03 பெப்ரவரி 2010, 06:55 AM]
தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க தாம் சேவையை நீடிக்கவுள்ளதாகவும், பதவியை இராஜினாமா செய்யப் போவதில்லை என்றும் இன்று ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார். [மேலும்]
செங்கல்பட்டு சிறப்பு முகாமில் நேற்று தமிழக பொலிஸார் நடத்தியுள்ள, முள்ளிவாய்க்கால் கொடூரம்: அகதிகள் மூவர் படுகாயம்
[புதன்கிழமை, 03 பெப்ரவரி 2010, 06:43 AM]
தமிழ்நாடு, செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்கள் மீது நேற்று இரவு சிறப்பு அதிரடி பொலிஸார் கண்முடித்தனமான முள்ளிவாய்க்காலுக்கு ஒப்பான தாக்குதலை நடத்தியுள்ளனர். இக் கொடூரத் தாக்குதலினால் மூன்று முகாம் வாசிகள் உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். [மேலும்]
இலங்கை அகதிகள் சிலருக்கு அவுஸ்திரேலியா நிரந்தர விசாவை வழங்கியுள்ளது
[புதன்கிழமை, 03 பெப்ரவரி 2010, 05:55 AM]
அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பபட்டுள்ள இலங்கை அகதிகள் உட்பட்ட 94 பேருக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் நிரந்தர விசா அனுமதியை வழங்கியுள்ளது. [மேலும்]
மட்டு. மாநகர முதல்வர் சிவகீதா பிரபாகரனுக்கு மரண அச்சுறுத்தல்
[புதன்கிழமை, 03 பெப்ரவரி 2010, 05:52 AM]
மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவகீதா பிரபாகரனுக்கு அமைச்சரான விநாயகமூர்த்தி முரளிதரனின் ஆயுதக்குழுவின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
கெப்பிட்டிக்கொல்லாவ குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய புலி உறுப்பினர் கைது
[புதன்கிழமை, 03 பெப்ரவரி 2010, 05:48 AM]
அனுராதபுர கெப்பிட்டிக்கொல்லாவ பிரதேசத்தில் 2006 ஆம் ஆண்டு இடம்பெற்ற குண்டு தாக்குதல் தொடர்பில் தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது. [மேலும்]
தேர்தலின் பின்னர் குழப்பம் ஏற்படுத்த சதித் திட்டம் தீட்டிய 37 பேர் கைது
[புதன்கிழமை, 03 பெப்ரவரி 2010, 03:36 AM]
ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த சதித் திட்டம் தீட்டிய 37 பேரை சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களில் பௌத்த பிக்குகள், இராணுவ உயரதிகாரிகளும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]
எரிக் சொல்ஹெய்மின் கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது
[புதன்கிழமை, 03 பெப்ரவரி 2010, 03:33 AM]
ஜனாதிபதித் தேர்தலில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் விடுத்த கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. [மேலும்]
சிறுபான்மை மக்களின் உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் எந்தவொரு கட்சியுடனும் இணைந்து செயற்படத் தயார்: இரா.சம்பந்தன்
[புதன்கிழமை, 03 பெப்ரவரி 2010, 03:31 AM]
சிறுபான்மை மக்களின் உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் எந்தவொரு கட்சியுடனும் இணைந்து செயற்படத் தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். [மேலும்]
லசந்த விக்ரமதுங்க படுகொலை தொடர்பில் இராணுவ பிரிகேடியர் ஒருவரிடம் விசாரணை
[புதன்கிழமை, 03 பெப்ரவரி 2010, 03:28 AM]
சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை சம்பவம் தொடர்பில் இராணுவ பிரிகேடியர் ஒருவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக புலனாய்வுப் பிரிவினர் அறிவித்துள்ளனர். [மேலும்]
தேர்தல் மோசடிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஐ.தே.க சத்தியாக்கிரக போராட்டத்தில்...
[புதன்கிழமை, 03 பெப்ரவரி 2010, 03:25 AM]
தேர்தல் மோசடி நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஐக்கிய தேசியக் கட்சி சத்தியாக்கிரக போராட்டமொன்றை ஆரம்பிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]
ஜனாதிபதி உள்ளிட்ட சிரேஸ்ட தலைவர்களின் பாதுகாப்பு உயர்த்தப்படவுள்ளது
[புதன்கிழமை, 03 பெப்ரவரி 2010, 03:23 AM]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட சிரேஸ்ட தலைவர்களின் பாதுகாப்பு உயர்த்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]
தமிழினம் ஈழத்தில் அழிக்கப்படுகிறது! தமிழ் மண் பறிக்கப்படுகிறது!
[புதன்கிழமை, 03 பெப்ரவரி 2010, 03:20 AM]
மீள் குடியேற்றத்தின் பின் வன்னி மக்கள் சுதந்திரமாக வாழப் போகிறார்களா? என்றால் அங்கேதான் சிங்களம் தனது சாதுரியமான காய்நகர்த்தல்களை மேற்கொள்ள இருக்கிறது.
அதாவது வன்னி மக்களை முடிந்தளவு படிப்படியாக மீள்குடியேற்றுவது, இதனை நிறைவேற்றி உலகநாடுகளின் கண்டனங்கள் அழுத்தங்களுக்கு முற்றுப்புள்ளிவைத்து...... [மேலும்]
வன்னி யுத்தத்தின்போது காணாமற்போன பிள்ளைகளை தேடும் பெற்றோருக்கு உதவக் கூட்டுமுயற்சி
[புதன்கிழமை, 03 பெப்ரவரி 2010, 02:36 AM]
வன்னிப் பகுதியில் கடந்த காலங்களில் இடம்பெற்ற யுத்த அனர்த்தங்களின் போது காணாமற்போன 18 வயதுக்குக் குறைந்த பிள்ளைகளைத் தேடும் பெற்றோருக்கு அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் மூலம் உதவிகள் வழங்கப்படுகின்றன. [மேலும்]
தமிழ் தேசியக் கொள்கையில் உறுதியாக உள்ளவர்களுக்கு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட கூட்டமைப்பு தலைமைப்பீடம் இடமளிக்காது
[புதன்கிழமை, 03 பெப்ரவரி 2010, 02:24 AM]
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசியக் கொள்கையில் உறுதியாக உள்ள, தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு இலங்கை தமிழரசுக் கட்சி இட ஒதுக்கீடுகளை வழங்கப் போவதில்லை என இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் ஊடாக அறிய முடிகின்றது. [மேலும்]
இராணுவ புரட்சி செய்ய திட்டமிட்டதாக அரசு தெரிவிக்கும் குற்றச்சாட்டை மறுக்கிறார் பொன்சேகா
[புதன்கிழமை, 03 பெப்ரவரி 2010, 02:12 AM]
ராஜபக்ஷ அரசை கவிழ்க்க, இராணுவ புரட்சியை ஏற்படுத்த திட்டமிட்டதாக என் மீது தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உண்மை அல்ல' என, இலங்கை இராணுவ முன்னாள் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார். [மேலும்]
Sponsor
Advertisements
உலக தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள மாநாட்டு அறிக்கை
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 11:03.36 AM ]
உலக தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் ஐரோப்பிய ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ள அகம் புலம் தமிழர் வாழ்வியல் மகாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மகாநாட்டு அமைப்பாளரும், ஐரோப்பிய ஒன்றியத்தலைவருமான துரை கணேசலிங்கம், மகாநாட்டு செயலாளருமான ப.பரமேஷ்வரன் ஆகியோர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள சிறப்பறிக்கை. [மேலும்]
கருத்துக்கூறினால் தமக்கு வெள்ளை வாகனம் அனுப்பப்படலாம் : சந்திரிகா பண்டாரநாயக்க
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 06:49.28 AM ]
18 வது அரசியலமைப்பு சீர்திருத்தம், இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் பயங்கரமான முயற்சி என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். [மேலும்]
சன் சீ கப்பல் இலங்கை அகதிகள் அனைவருக்கும் கனடாவில் புகலிடம் வழங்கக் கூடிய சாத்தியம்
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 06:15.13 AM ]
கனடாவிற்கு எம்.வி சன் சீ கப்பல் மூலம் சென்ற 492 இலங்கை தமிழ் அகதிகளுக்கும் அந்த நாட்டில் புகலிடம் அந்தஸ்து வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. [மேலும்]
(3ம் இணைப்பு)
நஞ்சருந்தி மயக்கமடைந்த நிலையில் காதல் ஜோடி மீட்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 04:45.49 AM ]
நஞ்சருந்தி தற்கொலைக்கு முயற்சித்த நிலையின் மயக்கமுற்றிருந்த காதல்ஜோடியொன்றை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த சம்பவமொன்று திருக்கோவில் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. [மேலும்]
வடக்கு கிழக்கு பகுதிகளில் இந்தியத் தலைவர்களின் பயணங்களின் மர்மம் என்ன?
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 01:36.33 AM ]
தமிழ் மக்கள் செறிந்து வாழும் வடக்கு கிழக்குப் பகுதிகள் அண்மைக்காலமாக அழையாத விருந்தாளிகளால் அமர்க்களப்பட்டு வருகின்றது. பல அமைச்சர்கள், இராஜதந்திரிகள் தற்போதும் வடபகுதிக்குப் பயணங்களை மேற்கொண்டு வந்தாலும், இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபாமா ராவின் பயணத்திற்கு இந்திய, இலங்கை ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்திருந்தன. [மேலும்]
தமிழின உயிர்கொலை நாள்- செப்டம்பர் 5 : கிழக்கு பல்கலைக்கழக அகதிமுகாம் படுகொலையின் 20ஆண்டு நினைவு நாள் இன்று - இரா.துரைரத்தினம்
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 12:24.36 PM ] []
ஓகஸ்ட் செப்டம்பர் மாதங்கள் கிழக்கு மாகாண மக்களைப் பொறுத்தவரை அவர்களின் வாழ்வில் மறக்க முடியாத துன்பங்களையும் இழப்புக்களையும் கொடுத்த மாதங்கள். 1990ஆம் ஆண்டு யூன் மாதம் விடுதலைப்புலிகளுக்கும் ஸ்ரீலங்கா படைகளுக்கும் இடையில் போர் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து மட்டக்களப்பு அம்பாறை பிரதேசங்களை ஸ்ரீலங்கா படைகள்..... [மேலும்]
விளம்பரம்
advertisement