Switch to
செய்திகள் 2010-02-06
இலங்கையில் அவசர காலச் சட்டம் நீட்டிக்கப்பட்டிருப்பதை பவ்ரல் அமைப்பு விமர்சித்துள்ளது
[சனிக்கிழமை, 06 பெப்ரவரி 2010, 05:17 PM]
இலங்கை நாடாளுமன்றத்தால் அவசர காலச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளதை பவ்ரல் எனப்படும் நியாயமான நேர்மையான தேர்தலுக்கான மக்கள் அமைப்பு விமர்சித்துள்ளது. [மேலும்]
இலங்கைக்கு ஆயுதக் கொள்வனவுக்கு 300 மில்லியன் அமெ.டொலர்கள் ரஷ்யா கடனுதவி
[சனிக்கிழமை, 06 பெப்ரவரி 2010, 05:05 PM] []
இலங்கை ஜனாதிபதியாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் முதல் ரஷ்யாவுக்கு மூன்று நாள் விஜயமாக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சென்றுள்ளார். [மேலும்]
கனடாவில் 76 இலங்கை அகதிகள் விடுதலை செய்யப்பட்டமை குறித்து நீதிமன்றம் குற்றச்சாட்டு
[சனிக்கிழமை, 06 பெப்ரவரி 2010, 04:50 PM]
கனடாவில் வன்கூவர் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 76 இலங்கை தமிழர்களை விடுவித்தமை தொடர்பில், கனேடிய பிராந்திய நீதிமன்றம் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. [மேலும்]
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி, பொதுத்தேர்தலில் தனித்து போட்டியிடும் சாத்தியம்
[சனிக்கிழமை, 06 பெப்ரவரி 2010, 04:17 PM]

எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, தனித்து போட்டியிடும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. [மேலும்]

இனியபாரதி சிறுவர்களை படைகளில் இணைப்பதாக வெளியான குற்றச்சாட்டை கருணா மறுத்துள்ளார்
[சனிக்கிழமை, 06 பெப்ரவரி 2010, 04:07 PM]
தமது நெருங்கிய சகாவான, இனியபாரதி சிறுவர்களை படையில் இணைப்பதாக ஐக்கிய நாடுகள் சபை, தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை, தேசிய இன ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துறை அமைச்சர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் மறுத்துள்ளார். [மேலும்]
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியில் இணையப்போவதில்லை: சிவகீதா
[சனிக்கிழமை, 06 பெப்ரவரி 2010, 03:48 PM]
தாம் தற்போதும்  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் அங்கத்தவர் என்ற நிலையில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியில்  இணையப் போவதில்லை என மட்டக்களப்பு மாநகர மேயர் சிவகீதா பிரபாகரன் தெரிவித்துள்ளார். [மேலும்]
லண்டனில் இலங்கையின் தேசியக்கொடியை எரிக்க முயன்றவர் கைது
[சனிக்கிழமை, 06 பெப்ரவரி 2010, 03:45 PM]
கடந்த 4 ஆம் திகதியன்று, லண்டனில் உள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகரகத்தில் பிரவேசித்து இலங்கையின் தேசியக் கொடியை எரியூட்ட முயன்றமை தொடர்பில் ஒருவரை லண்டன் பொலிஸார் கைது செய்திருப்பதாக இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் ரோஹித்த போகல்லாகம தெரிவித்துள்ளார். [மேலும்]
அவுஸ்திரேலியா நோக்கி பயணித்த மற்றுமொரு படகு நடுக்கடலில் மீட்பு
[சனிக்கிழமை, 06 பெப்ரவரி 2010, 03:27 PM]
அவுஸ்திரேலியாவை நோக்கி வந்துகொண்டிருந்த மற்றுமொரு அகதிகள் படகு வழிமறிக்கப்பட்டு கிறிஸ்மஸ் தீவுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அவுஸ்திரேலிய செய்திகள் தெரிவிக்கின்றன. [மேலும்]
போரின் கொடூரங்களால் எமது மக்களின் எதிர்காலமே கேள்விக்குறி: புதுமாத்தளனுக்கு சென்று திரும்பிய யாழ். ஆயர் கவலை
[சனிக்கிழமை, 06 பெப்ரவரி 2010, 12:32 PM]
யாழ் மறை மாவட்ட ஆயர் வண. தோமஸ் சௌந்தரநாயகம் வன்னியில் இறுதிக் கட்ட யுத்தம் நடைபெற்ற புதுமாத்தளன் பிரதேசத்திற்கு படையினரின் அனுமதியுடன் பயணம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. [மேலும்]
வெளிநாட்டு பிரஜைகள் அரசியல் ஆய்வுகளுக்காக இலங்கைக்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்படும்
[சனிக்கிழமை, 06 பெப்ரவரி 2010, 08:24 AM]
வெளிநாட்டு பிரஜைகள் அரசியல் ஆய்வுகளுக்காக இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்படும் என திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்]
இராணுவத்திற்கு எதிராக பிரசாரம் மேற்கொள்ளும் அரச சார்பற்ற அமைப்புக்கள் தடை செய்யப்படும்: அரசாங்கம்
[சனிக்கிழமை, 06 பெப்ரவரி 2010, 08:22 AM]
இராணுவத்திற்கு எதிராக போலியான பிரச்சாரங்களை மேற்கொண்டு வரும் உள்நாட்டு, வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களை தடை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. [மேலும்]
கருணா மற்றும் பிள்ளையானுக்கும் இடையிலான முறுகல் நிலை உக்கிரம்
[சனிக்கிழமை, 06 பெப்ரவரி 2010, 06:09 AM]
தேச நிர்மாண அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் என்றழைக்கப்படும் கருணாவிற்கும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானுக்கும் இடையிலான முறுகல் நிலை உக்கிரமடைந்துள்ளதாக லக்பிம பிரதான செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்]
யாழ்.-காங்கேசன் வீதி விஸ்தரிப்பால் 27 இந்து ஆலயங்கள் அழிவடையும் நிலை: மாற்று நடவடிக்கை எடுக்குமாறு இந்து மாமன்றம் வலியுறுத்து
[சனிக்கிழமை, 06 பெப்ரவரி 2010, 04:18 AM]
யாழ்.காங்கேசன்துறை வீதியை விஸ்தரிக்கும் போது 27 இந்து ஆலயங்களும், பழம்பெரும் கலாசாரச் சின்னங்களும் அழிவடையும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த விடயம் குறித்து யாழ்ப்பாணத்தில் உள்ள நிபுணர்களுடன் ஆராய்ந்து மாற்று ஏற்பாடு செய்யவேண்டும் என அகில இலங்கை இந்து மாமன்றம் வடமாகாண ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
[மேலும்]
யாழில் இந்தியா தூதுவராலயம் திறக்கும் நோக்கம், தமிழர் பண்பாட்டை சிதைத்து, சமுதாய சீரழிவை செயல்படுத்தவே...
[சனிக்கிழமை, 06 பெப்ரவரி 2010, 03:48 AM]
இந்தியா  யாழில் தூதுவராலயம் திறக்கும் நோக்கம் இந்திய உளவுபிரிவான  "றோ" அங்கே அலுவலகம் திறந்து தமிழர் பண்பாட்டை சிதைப்பதற்கும் தேசியத்தில் உள்ள   உள்ள மாணவர்களை  அழித்து யாழில் சமுதாய சீரழிவை   செயல்படுத்தவுமே என புலம்பெயர் தமிழர் சமூக அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. [மேலும்]
யாழ்ப்பாண கோட்டையை புனரமைக்க நெதர்லாந்து அரசாங்கம் நிதியுதவி
[சனிக்கிழமை, 06 பெப்ரவரி 2010, 03:14 AM] []
யாழ்ப்பாணக் கோட்டையை புனரமைக்க நெதர்லாந்து அரசாங்கம், 61.1 மில்லியன் ரூபாய்களை வழங்கியுள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. [மேலும்]
இலங்கையின் 'சர்வதேச முள்ளிவாய்க்கால்" நடவடிக்கை எப்போது?
[சனிக்கிழமை, 06 பெப்ரவரி 2010, 03:09 AM]
கடந்த ஆறு தசாப்தங்களாக நடைபெற்ற தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தினால் ஏறக்குறைய இரண்டு இலட்சம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டும், நாற்பதாயிரம் மக்களுக்கு மேல் காணாமல் போயும், ஐம்பதினாயிரத்திற்கு மேற்பட்டோர் ஊனமுற்றும், ஆயிரக்கணக்கில் தமிழ்ப் பெண்கள் இலங்கை அரச படைகளினால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டும், பலகோடி ரூபா பெறுமதியான சொத்துக்களும் நாசமாக்கப்பட்டுள்ளதாக பல சர்வதேச நிறுவனங்கள் கணிப்பிட்டுள்ளன. [மேலும்]
இலங்கையில் அவசரகாலச் சட்டம் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது
[சனிக்கிழமை, 06 பெப்ரவரி 2010, 02:26 AM]
இலங்கையில் நீண்ட காலமாக நடைமுறையில் உள்ள அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்படுவதற்கான பிரேரணை 87 மேலதிக வாக்குகளினால் வெள்ளிக்கிழமையன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. [மேலும்]
இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆடைக்கோட்டா சலுகை ரத்து
[சனிக்கிழமை, 06 பெப்ரவரி 2010, 02:22 AM]
இலங்கைக்கான ஆடை ஏற்றுமதி கோட்டா சலுகையை ரத்துச்செய்ய ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது. இதனடிப்படையில் உத்தியோகபூர்வ முன்னெடுப்புகள், இந்த மாத இறுதியில் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
சரத் பொன்சேகா, ரஸ்ய முறையிலான இராணுவப் புரட்சிக்கு திட்டமிட்டார்: அரசாங்கம் குற்றச்சாட்டு
[சனிக்கிழமை, 06 பெப்ரவரி 2010, 02:19 AM]
கடந்த ஜனாதிபதி தேர்தலை அடுத்து ரஸ்ய பாணியிலான இராணுவப்புரட்சி ஒன்றுக்கு ஜெனரல் சரத் பொன்சேகா திட்டமிட்டார் என அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. [மேலும்]
ஜனாதிபதியின் மகனான கடற்படை அதிகாரி, கட்டாய ஓய்வில் அனுப்பப்படவேண்டும்: ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை
[சனிக்கிழமை, 06 பெப்ரவரி 2010, 02:16 AM]
அரசியலில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில்,14 இராணுவ அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு வழங்கப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதியின் மகனான கடற்படை அதிகாரி யோசித ராஜபக்சவும் கட்டாய ஓய்வில் அனுப்பப்படவேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி கோரியுள்ளது. [மேலும்]
ஜனாதிபதி மஹிந்த இன்று ரஸ்யா பயணம்
[சனிக்கிழமை, 06 பெப்ரவரி 2010, 02:11 AM]
இலங்கையின் ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்ச இன்று ரஸ்யாவுக்கான விஜயத்தை மேற்கொள்கிறார். எதிர்வரும் 9 ஆம் திகதி வரை அவர் ரஸ்யாவில் தங்கியிருப்பார் என தெரியவருகிறது. [மேலும்]
கருணாவின் தளபதி சிறுவர்களை படைகளில் சேர்க்கிறார்: ஐக்கிய நாடுகளின் பிரதிநிதி
[சனிக்கிழமை, 06 பெப்ரவரி 2010, 02:08 AM]

கிழக்கு மாகாணத்தில் அமைச்சர் கருணாவின் தலைமையில் இயங்கும்  தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் கொமாண்டர் இனியபாரதி, சிறுவர்களை படைக்கு சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. [மேலும்]

Sponsor
Advertisements
உலக தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள மாநாட்டு அறிக்கை
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 11:03.36 AM ]
உலக தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் ஐரோப்பிய ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ள அகம் புலம் தமிழர் வாழ்வியல் மகாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மகாநாட்டு அமைப்பாளரும், ஐரோப்பிய ஒன்றியத்தலைவருமான துரை கணேசலிங்கம், மகாநாட்டு செயலாளருமான ப.பரமேஷ்வரன் ஆகியோர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள சிறப்பறிக்கை. [மேலும்]
கருத்துக்கூறினால் தமக்கு வெள்ளை வாகனம் அனுப்பப்படலாம் : சந்திரிகா பண்டாரநாயக்க
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 06:49.28 AM ]
18 வது அரசியலமைப்பு சீர்திருத்தம், இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் பயங்கரமான முயற்சி என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். [மேலும்]
சன் சீ கப்பல் இலங்கை அகதிகள் அனைவருக்கும் கனடாவில் புகலிடம் வழங்கக் கூடிய சாத்தியம்
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 06:15.13 AM ]
கனடாவிற்கு எம்.வி சன் சீ கப்பல் மூலம் சென்ற 492 இலங்கை தமிழ் அகதிகளுக்கும் அந்த நாட்டில் புகலிடம் அந்தஸ்து வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. [மேலும்]
(3ம் இணைப்பு)
நஞ்சருந்தி மயக்கமடைந்த நிலையில் காதல் ஜோடி மீட்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 04:45.49 AM ]
நஞ்சருந்தி தற்கொலைக்கு முயற்சித்த நிலையின் மயக்கமுற்றிருந்த காதல்ஜோடியொன்றை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த சம்பவமொன்று திருக்கோவில் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. [மேலும்]
வடக்கு கிழக்கு பகுதிகளில் இந்தியத் தலைவர்களின் பயணங்களின் மர்மம் என்ன?
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 01:36.33 AM ]
தமிழ் மக்கள் செறிந்து வாழும் வடக்கு கிழக்குப் பகுதிகள் அண்மைக்காலமாக அழையாத விருந்தாளிகளால் அமர்க்களப்பட்டு வருகின்றது. பல அமைச்சர்கள், இராஜதந்திரிகள் தற்போதும் வடபகுதிக்குப் பயணங்களை மேற்கொண்டு வந்தாலும், இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபாமா ராவின் பயணத்திற்கு இந்திய, இலங்கை ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்திருந்தன. [மேலும்]
தமிழின உயிர்கொலை நாள்- செப்டம்பர் 5 : கிழக்கு பல்கலைக்கழக அகதிமுகாம் படுகொலையின் 20ஆண்டு நினைவு நாள் இன்று - இரா.துரைரத்தினம்
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 12:24.36 PM ] []
ஓகஸ்ட் செப்டம்பர் மாதங்கள் கிழக்கு மாகாண மக்களைப் பொறுத்தவரை அவர்களின் வாழ்வில் மறக்க முடியாத துன்பங்களையும் இழப்புக்களையும் கொடுத்த மாதங்கள். 1990ஆம் ஆண்டு யூன் மாதம் விடுதலைப்புலிகளுக்கும் ஸ்ரீலங்கா படைகளுக்கும் இடையில் போர் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து மட்டக்களப்பு அம்பாறை பிரதேசங்களை ஸ்ரீலங்கா படைகள்..... [மேலும்]
விளம்பரம்
advertisement