Switch to
   
   
   
செய்தி
அராஜகத்தை கட்டவிழ்த்து விடவே அவசரகாலச் சட்டம் நீடிக்கப்படுகிறது: ஹக்கீம்
[ புதன்கிழமை, 10 மார்ச் 2010, 05:01.34 AM GMT +05:30 ]

அரசியலின் எதிராளிகள் மீது அமைச்சர்களின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களே தாக்குதல்களை மேற்கொள்வது வேடிக்கையான விடயமாக இருக்கின்றது என்பதுடன் அரசாங்கத்தின் அராஜகத்தை கட்டவிழ்த்து விடுவதற்கே அவசரகாலச் சட்டம் நீடிக்கப்படுகின்றது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் எம்.பி.யுமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.


பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கி ழமை நடைபெற்ற அவசரகாலச்சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் மேலும் கூறியதாவது;

மன்னாரில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அமைப்பாளர் மீது அமைச்சரொருவரின் அடியாட்கள் தாக்குதல் நடத்தியமையினால் மன்னாரில் வர்த்தகர்கள் கடைகளை மூடி இன்று (நேற்று) எதிர்ப்பு தெரிவித்தனர்.

அமைச்சரொருவரின் அடியாட்களின் செயற்பாடுகளுக்கு எதிராக மக்கள் பொலிஸார், நீதிவானிடம் மகஜரை கையளித்துள்ளனர். அவர்கள் வழங்கிய உத்தரவை அடுத்தே கடைகள் மீண்டும் நேற்று நண்பகல் வேளையில் திறக்கப்பட்டுள்ளன.

அரசாங்கத்தின் அராஜக நடவடிக்கைகளை அமைச்சர்களின் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் முன்னின்று நடத்துவதுதான் வேடிக்கையான விடயமாக இருக்கின்றது. அவர்களே அரசியலின் எதிராளிகளை தாக்குகின்றனர்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெ>விக்கப்ப டுகின்ற போதிலும் சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு கிடைக்கவில்லை.

பாதுகாப்பு இல்லாத நிலையிலேயே கட்சித்தலைவர்கள் தேர்தலுக்கு முகம்கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

இவ்வாறான நிலையில் அரசாங்கத்தின் அராஜகத்தை கட்டவிழ்த்து விடவே இந்த அவசரகாலச் சட்டம் மீண்டும் நீடிக்கப்படுகின்றது. அமைச்சர்கள் பயணிக்கும் வாகனங்களுக்கு பின்னால் இலக்க தகடற்ற வாகனங்கள் பயணிக்கின்றன. இது ஜனநாயகத்திற்கு குந்தகம் விளைவிக்கும் செயல் மட்டுமல்லாது எதிர்காலத்தில் பெரும் ஆபத்தை விளைவிக்கும்.

அதேவேளை, ஊடகங்களையோ அல்லது மக்களையோ அடக்குமுறைக்கு உட்படுத்த அவசரகாலச் சட்டம் பயன்படுத்தப்பட மாட்டாது என பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.

இவ்வாறான குற்றச்சாட்டுகளை அரசாங்கம் முழுiமாக நிராகரிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 






செய்திகள்: இந்தியா, தமிழகம், வணிகம், வீடியோ, கட்டுரைகள், நேர்காணல்

பிந்திய 15 செய்திகள்
Sponsor
Advertisements
உலக தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள மாநாட்டு அறிக்கை
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 11:03.36 AM ]
உலக தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் ஐரோப்பிய ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ள அகம் புலம் தமிழர் வாழ்வியல் மகாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மகாநாட்டு அமைப்பாளரும், ஐரோப்பிய ஒன்றியத்தலைவருமான துரை கணேசலிங்கம், மகாநாட்டு செயலாளருமான ப.பரமேஷ்வரன் ஆகியோர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள சிறப்பறிக்கை. [மேலும்]
கருத்துக்கூறினால் தமக்கு வெள்ளை வாகனம் அனுப்பப்படலாம் : சந்திரிகா பண்டாரநாயக்க
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 06:49.28 AM ]
18 வது அரசியலமைப்பு சீர்திருத்தம், இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் பயங்கரமான முயற்சி என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். [மேலும்]
சன் சீ கப்பல் இலங்கை அகதிகள் அனைவருக்கும் கனடாவில் புகலிடம் வழங்கக் கூடிய சாத்தியம்
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 06:15.13 AM ]
கனடாவிற்கு எம்.வி சன் சீ கப்பல் மூலம் சென்ற 492 இலங்கை தமிழ் அகதிகளுக்கும் அந்த நாட்டில் புகலிடம் அந்தஸ்து வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. [மேலும்]
(3ம் இணைப்பு)
நஞ்சருந்தி மயக்கமடைந்த நிலையில் காதல் ஜோடி மீட்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 04:45.49 AM ]
நஞ்சருந்தி தற்கொலைக்கு முயற்சித்த நிலையின் மயக்கமுற்றிருந்த காதல்ஜோடியொன்றை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த சம்பவமொன்று திருக்கோவில் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. [மேலும்]
வடக்கு கிழக்கு பகுதிகளில் இந்தியத் தலைவர்களின் பயணங்களின் மர்மம் என்ன?
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 01:36.33 AM ]
தமிழ் மக்கள் செறிந்து வாழும் வடக்கு கிழக்குப் பகுதிகள் அண்மைக்காலமாக அழையாத விருந்தாளிகளால் அமர்க்களப்பட்டு வருகின்றது. பல அமைச்சர்கள், இராஜதந்திரிகள் தற்போதும் வடபகுதிக்குப் பயணங்களை மேற்கொண்டு வந்தாலும், இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபாமா ராவின் பயணத்திற்கு இந்திய, இலங்கை ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்திருந்தன. [மேலும்]
தமிழின உயிர்கொலை நாள்- செப்டம்பர் 5 : கிழக்கு பல்கலைக்கழக அகதிமுகாம் படுகொலையின் 20ஆண்டு நினைவு நாள் இன்று - இரா.துரைரத்தினம்
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 12:24.36 PM ] []
ஓகஸ்ட் செப்டம்பர் மாதங்கள் கிழக்கு மாகாண மக்களைப் பொறுத்தவரை அவர்களின் வாழ்வில் மறக்க முடியாத துன்பங்களையும் இழப்புக்களையும் கொடுத்த மாதங்கள். 1990ஆம் ஆண்டு யூன் மாதம் விடுதலைப்புலிகளுக்கும் ஸ்ரீலங்கா படைகளுக்கும் இடையில் போர் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து மட்டக்களப்பு அம்பாறை பிரதேசங்களை ஸ்ரீலங்கா படைகள்..... [மேலும்]
விளம்பரம்
advertisement