Switch to
   
   
   
செய்தி
'விடுவிக்கப்பட்ட' பிரதேசங்களில் புதிய இராணுவ முகாம்கள் அமைக்கப்படும்: ஜகத் ஜயசூரிய
[ திங்கட்கிழமை, 20 யூலை 2009, 02:57.33 AM GMT +05:30 ]
இலங்கையின், வடபகுதியில் இலங்கைப் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களின் தேவையின் நிமித்தம் புதிய இராணுவ முகாம்கள் அமைக்கப்படுமென புதிய இராணுவத்தளபதி லெப்.ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
இராணுவத் தளபதியாக பதவியேற்ற பின்னர் நேற்று சனிக்கிழமை தலதா மாளிகைக்கு சென்று வழிபட்டதுடன் மல்வத்தை மகாநாயக்க தேரர் திப்பட்டுவ சுமங்கல தேரரையும் சந்தித்து ஆசி பெற்றதுடன் ஊடகவியலாளர்களையும் சந்தித்தபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“விடுவிக்கப்பட்ட” பிரதேசங்களில் இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியமர்த்துதல், அரசு மேற்கொண்டுவரும் புனர் நிர்மாணப்பணிகள், மற்றும் செயற்றிட்டவேலைகள், அமைதியை நிலைநாட்டல் என்பனவற்றில் இராணுவத்தினர் முக்கிய பங்காற்ற முடியும். இராணுவத்தில் பல்வேறு தொழில் துறையில் ஈடுபடக்கூடியவர்கள் உள்ளதால், அந்தந்தத்துறைகளில் அவர்களை ஈடுபடுத்தி அரசின் செயற்திட்டங்களுக்கு ஒத்துழைக்க முடியும்.

இராணுவத்தில் தற்போது இரண்டு இலட்சம் பேர் உள்ளனர். அவர்களுக்கு தொழிற்பயிற்சி வழங்க நடவடிக்கை எடுத்துள்ளேன். இராணுவத்தில் தேவையானவற்றுக்கு அவர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். வன்னியில் 'விடுவிக்கப்பட்ட' பிரதேசம் முழுவதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், மீள்குடியேற்ற நடவடிக்கையில் பாதுகாப்பு வழங்கவும் இராணுவ முகாம்களை அமைக்க எண்ணியுள்ளோம்.

“விடுவிக்கப்பட்ட” பிரதேசங்களில் இராணுவத்தினர் உள்ளனர். ஆனால் தற்காலிக முகாம்களிலேயே இராணுவத்தினர் தங்கியுள்ளனர். நிரந்தர முகாம்களை அமைப்பதற்கு அரச காணிகள் தொடர்பான விபரங்கள் கண்டறியப்பட்டுள்ளது.

கிராமங்கள், நகரங்களில் நிரந்தர முகாம்களை அமைக்கவும் எண்ணியுள்ளோம். இராணுவத்தினர் ஒன்றில் யுத்தம் புரியவேண்டும் அல்லது பயிற்சியில் ஈடுபடவேண்டும். யுத்தம் முடிவடைந்துவிட்டது. ஆனால் மீண்டும் அவ்வாறானதொரு சூழ்நிலை ஏற்பட்டால் அதனை எதிர்கொள்ளும் வகையில் இராணுவத்தினர் பயிற்சியில் ஈடுபடவேண்டும்.
 
நாட்டில் சட்டத்தையும் ஒழுக்கத்தையும் நிலை நாட்டுவதற்கு இராணுவத்தின் ஒத்துழைப்பு வழங்கப்படும். அமைதியை நிலைநாட்டும் பணி காவல்துறையிடம் உள்ளது. எனினும் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு பெரும் எண்ணிக்கையான இராணுவத்தினர் உள்ளனர்.

 
பிந்திய 15 செய்திகள்
Sponsor
Advertisements
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை இரண்டாவது அமர்வினை அறிவித்துள்ளது! தம் மீதான அவதூறு பற்றி ருத்ரா விளக்குகிறார்!
[ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 01:11.16 AM ]
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவையின் இரண்டாவது அமர்வினை செப்டெம்பர் மாத இறுதிப்பகுதியில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதை பொதுமக்களுக்கு அறியத் தருவதில் நாம் மகிழ்வடைகிறோம். [மேலும்]
யாழ். புலோலி வாசிக்கு மரண தண்டனை : தீர்ப்பு வழங்கப்பட்டதும் கைதி மாடியில் இருந்து குதித்துள்ளார்
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:15.51 PM ]
யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் இன்று கைதி ஒருவருக்கு மரண தண்டனையை விதித்தது. இதனை தண்டனை வழங்கப்பட்ட கைதி யாழ்ப்பாண நீதிமன்ற கட்டிடத்தொகுதியில் இருந்து கீழே குதித்துள்ளார். [மேலும்]
இலங்கைப் பணிப் பெண் மீது சித்திரவதை மேற்கொள்ளப்படவில்லை: சவூதி அரேபியா
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 04:28.17 PM ]
இலங்கைப் பணிப் பெண் மீது சித்திரவதை மேற்கொள்ளப்படவில்லை என சவூதி அரேபிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். [மேலும்]
புலிகள் பயன்படுத்திய விமானத்தின் பாகங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் மீட்பு
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 03:37.32 PM ] []
விடுதலைப் புலிகள் பயன்படுத்திய விமானத்தின் பாகங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் வான் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
(2ம் இணைப்பு)
தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற இந்தியா தவறிவிட்டது: நிருபமா முன் பேராசிரியர் சிற்றம்பலம் கவலை
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 02:42.17 AM ] []
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதித் தருணங்களில் இந்தியா வழங்கிய ஆயுதங்களே பொது மக்கள் பெருமளவில் கொல்லப்படுவதற்குக் காரணமாக அமைந்ததாக தமிழ் மக்கள் இன்னமும் கருதுவதாக பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் தெரிவித்தார். [மேலும்]
ஒரு பெண் போராளியின் கண்ணீர் கதை! அனாதைகளாக்கப்பட்ட பிள்ளைகளின் கண்ணீரை யார் துடைப்பார்?: இரா.துரைரத்தினம்
[ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 08:04.17 AM ] []
தமது இனத்தின் விடுதலைக்காக தங்களின் உயிர்களை தியாகம் செய்த போராளிகள் பெரும் நம்பிக்கையோடுதான் அந்த மண்ணைவிட்டு பிரிந்து போனார்கள். தங்களின் பிள்ளைகளை தங்களின் குடும்பங்களை தமது இனம் கைவிட்டு விடாது என்று மலைபோல் நம்பியிருந்தார்கள். [மேலும்]
விளம்பரம்
advertisement