|
|
|
| யாழ். ஐ.ம.சுதந்திர கூட்டமைப்பின் காரியாலய திறப்பு விழாவிற்கு, பொலிஸார் பொதுமக்களை பலவந்தமாக கூட்டி வந்துள்ளனர் |
| [ திங்கட்கிழமை, 20 யூலை 2009, 07:05.44 AM GMT +05:30 ] |
யாழ்ப்பாண குடாநாட்டில் நேற்று இடம்பெற்ற ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் காரியாலய திறப்பு விழாவுக்கு பொலிசாரினால் பலவந்தமாக பொதுமக்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர். |
உள்ளுர் பொலிஸ் பிரிவுகளில் இருந்து ஒவ்வொரு வாகனத்திலும் தலா 10 பேர் வீதம் பொதுமக்கள் பலவந்தமாக அழைத்து வரப்பட்டதாக யாழ்ப்பாண தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, சுண்டிகுளி சோமசுந்தரம் வீதியில் உள்ள இந்த காரியாலய திறப்பு விழாவுக்கு, ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவாநந்தா சமூகமளித்திருக்கவில்லை என்பது சுட்டிக்காட்டத்தகது.
இந்த காரியாலய திறப்பு விழா தொடர்பில் தமக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை என ஈழ மக்கள் ஜனநாயக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
யாழ். தொழில் நுட்ப கல்லூரியின் மாணவர் குழு ஒன்றும் பலவந்தமாக இந்த விழாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
பொது மக்கள் பொலிஸ் நிலையங்களுக்கு அழைக்கப்பட்டு, இந்த விழாவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இதனால் யாழ்ப்பாண குடாநாட்டு மக்கள் பலத்த அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். |
|
|
|
| நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை இரண்டாவது அமர்வினை அறிவித்துள்ளது! தம் மீதான அவதூறு பற்றி ருத்ரா விளக்குகிறார்! |
| [ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 01:11.16 AM ] |
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவையின் இரண்டாவது அமர்வினை செப்டெம்பர் மாத இறுதிப்பகுதியில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதை பொதுமக்களுக்கு அறியத் தருவதில் நாம் மகிழ்வடைகிறோம். [மேலும்] |
| யாழ். புலோலி வாசிக்கு மரண தண்டனை : தீர்ப்பு வழங்கப்பட்டதும் கைதி மாடியில் இருந்து குதித்துள்ளார் |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:15.51 PM ] |
யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் இன்று கைதி ஒருவருக்கு மரண தண்டனையை விதித்தது. இதனை தண்டனை வழங்கப்பட்ட கைதி யாழ்ப்பாண நீதிமன்ற கட்டிடத்தொகுதியில் இருந்து கீழே குதித்துள்ளார். [மேலும்] |
| இலங்கைப் பணிப் பெண் மீது சித்திரவதை மேற்கொள்ளப்படவில்லை: சவூதி அரேபியா |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 04:28.17 PM ] |
இலங்கைப் பணிப் பெண் மீது சித்திரவதை மேற்கொள்ளப்படவில்லை என சவூதி அரேபிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். [மேலும்] |
| புலிகள் பயன்படுத்திய விமானத்தின் பாகங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் மீட்பு |
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 03:37.32 PM ] [ ] |
விடுதலைப் புலிகள் பயன்படுத்திய விமானத்தின் பாகங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் வான் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. [மேலும்] | | (2ம் இணைப்பு) |
| தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற இந்தியா தவறிவிட்டது: நிருபமா முன் பேராசிரியர் சிற்றம்பலம் கவலை |
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 02:42.17 AM ] [ ] |
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதித் தருணங்களில் இந்தியா வழங்கிய ஆயுதங்களே பொது மக்கள் பெருமளவில் கொல்லப்படுவதற்குக் காரணமாக அமைந்ததாக தமிழ் மக்கள் இன்னமும் கருதுவதாக பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் தெரிவித்தார். [மேலும்] |
|
|
| advertisement |
|
|