Switch to
   
   
   
செய்தி
ஒரு குடும்பத்தின் கடன்சுமை எட்டு இலட்சமாக அதிகரித்துள்ளது: ஹர்சா டி சில்வா
[ செவ்வாய்க்கிழமை, 09 மார்ச் 2010, 05:37.01 AM GMT +05:30 ]
கடந்த வருடம் அரசு 459 பில்லியன் ரூபாய்களை இழந்துள்ளது. இந்த இழப்பானது நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்தின் ஒரு வருட இழப்பை 100,000 ரூபாய்களாக உயர்த்தியுள்ளது என பொருளியல் ஆய்வாளரும், ஐக்கிய தேசிய முன்னனியின் தேசியப்பட்டியல் வேட்பாளருமான ஹர்சா டி சில்வா தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

கடந்த வருடம் அரசு 459 பில்லியன் ரூபாய்களை இழந்துள்ளது. இந்த இழப்பானது நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்தின் ஒரு வருட இழப்பை 100,000 ரூபாய்களாக உயர்த்தியுள்ளது. தற்போது சிறிலங்காவில் உள்ள ஒரு குடும்பத்தின் கடன்சுமை 835,000 ரூபாய்கள் ஆகும்.

மகிந்த சிந்தனை என்ற குறுகிய அரசியல் நோக்கம் கொண்ட அரசின் நடவடிக்கைகயே இதற்கு காரணம். சிறீலங்கா உலக நாடுகளிடம் இருந்து 4,160 பில்லியன் ரூபாய்களை கடனாக பெற்றுள்ளது.

மகிந்த அரசு அதிக செலவுமிக்க முகவர்களின் மூலம் வெளிநாட்டுக் கடன்களை பெற்றுவருகின்றது. அதிக வட்டி விகிதத்தில் எச்.எஸ்.பி.சி வங்கியிடம் இருந்து பெற்றுக்கொண்ட கடனை இங்கு உதாரணமாக குறிப்பிடலாம்.

அதிக வட்டி விகித கடனின் அளவு ஒரு வருடத்தில் 151 விகிதத்தினால் அதிகரித்துள்ளது. 2008 ஆம் ஆண்டு 164 பில்லியன் ரூபாய்களாக இருந்த கடன்சுமை 2009 ஆம் ஆண்டு 411 பில்லியன் ரூபாய்களாக அதிகரித்துள்ளது.

சிறீலங்கா அரசு தனது கடன்களை செலுத்த முடியாத நிலையில் உள்ளது. சிறீலங்கா அரசு பெற்றுக்கொண்ட கடன் தொகையின் தவணைமுறை செலுத்தல் நிதி (முதலும், வட்டியும்) 824 பில்லியன் ரூபாய்கள், ஆனால் வருமானம் 702 பில்லியன் ரூபாய்கள்.

2009 ஆம் ஆண்டின் வரவுசெலவுத்திட்ட துண்டுவிழும் தொகை 9.7 வீதம் என அரசு தெரிவித்துள்ளது. ஆனால் அதன் உண்மையான தொகை 10.2 வீதமாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

செய்திகள்: இந்தியா, தமிழகம், வணிகம், வீடியோ, கட்டுரைகள், நேர்காணல்

பிந்திய 15 செய்திகள்
Sponsor
Advertisements
உலக தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள மாநாட்டு அறிக்கை
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 11:03.36 AM ]
உலக தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் ஐரோப்பிய ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ள அகம் புலம் தமிழர் வாழ்வியல் மகாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மகாநாட்டு அமைப்பாளரும், ஐரோப்பிய ஒன்றியத்தலைவருமான துரை கணேசலிங்கம், மகாநாட்டு செயலாளருமான ப.பரமேஷ்வரன் ஆகியோர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள சிறப்பறிக்கை. [மேலும்]
கருத்துக்கூறினால் தமக்கு வெள்ளை வாகனம் அனுப்பப்படலாம் : சந்திரிகா பண்டாரநாயக்க
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 06:49.28 AM ]
18 வது அரசியலமைப்பு சீர்திருத்தம், இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் பயங்கரமான முயற்சி என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். [மேலும்]
சன் சீ கப்பல் இலங்கை அகதிகள் அனைவருக்கும் கனடாவில் புகலிடம் வழங்கக் கூடிய சாத்தியம்
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 06:15.13 AM ]
கனடாவிற்கு எம்.வி சன் சீ கப்பல் மூலம் சென்ற 492 இலங்கை தமிழ் அகதிகளுக்கும் அந்த நாட்டில் புகலிடம் அந்தஸ்து வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. [மேலும்]
(3ம் இணைப்பு)
நஞ்சருந்தி மயக்கமடைந்த நிலையில் காதல் ஜோடி மீட்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 04:45.49 AM ]
நஞ்சருந்தி தற்கொலைக்கு முயற்சித்த நிலையின் மயக்கமுற்றிருந்த காதல்ஜோடியொன்றை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த சம்பவமொன்று திருக்கோவில் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. [மேலும்]
வடக்கு கிழக்கு பகுதிகளில் இந்தியத் தலைவர்களின் பயணங்களின் மர்மம் என்ன?
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 01:36.33 AM ]
தமிழ் மக்கள் செறிந்து வாழும் வடக்கு கிழக்குப் பகுதிகள் அண்மைக்காலமாக அழையாத விருந்தாளிகளால் அமர்க்களப்பட்டு வருகின்றது. பல அமைச்சர்கள், இராஜதந்திரிகள் தற்போதும் வடபகுதிக்குப் பயணங்களை மேற்கொண்டு வந்தாலும், இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபாமா ராவின் பயணத்திற்கு இந்திய, இலங்கை ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்திருந்தன. [மேலும்]
தமிழின உயிர்கொலை நாள்- செப்டம்பர் 5 : கிழக்கு பல்கலைக்கழக அகதிமுகாம் படுகொலையின் 20ஆண்டு நினைவு நாள் இன்று - இரா.துரைரத்தினம்
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 12:24.36 PM ] []
ஓகஸ்ட் செப்டம்பர் மாதங்கள் கிழக்கு மாகாண மக்களைப் பொறுத்தவரை அவர்களின் வாழ்வில் மறக்க முடியாத துன்பங்களையும் இழப்புக்களையும் கொடுத்த மாதங்கள். 1990ஆம் ஆண்டு யூன் மாதம் விடுதலைப்புலிகளுக்கும் ஸ்ரீலங்கா படைகளுக்கும் இடையில் போர் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து மட்டக்களப்பு அம்பாறை பிரதேசங்களை ஸ்ரீலங்கா படைகள்..... [மேலும்]
விளம்பரம்
advertisement