|
|
|
| புதிய அரசியல் கூட்டணி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் விரைவில் ஆரம்பமாகும்: ரணில் |
| [ திங்கட்கிழமை, 20 யூலை 2009, 03:50.47 AM GMT +05:30 ] |
புதிய அரசியல் கூட்டணி ஒன்றை அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் விரைவில் ஆரம்பமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
|
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாதொழித்தல், சமூக நீதியுடன் கூடிய பொருளாதார கட்டமைப்பொன்றை உருவாக்குதல், அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது கவனம் செலுத்தப்படவுள்ளது.
மொனராகலை பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பொதுவான இணக்கப்பாடொன்றை எட்டுவது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு அனுமதி வழங்கியுள்ளதாகவும், ஏனைய கட்சிகளுடன் எதிர்காலத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அபே ஜாதிக கட்சி மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணி போன்ற கட்சிகளிலிருந்து இந்தப் பேச்சுவார்த்தைக்கு பிரதிநிதிகள் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கட்சி சின்னத்தில் மாற்றங்கள் ஏற்படுத்தக் கூடாது என மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளதாகவும், இது தொடர்பாக ஏனைய கட்சிகளுக்கு ஏற்கனவே அறிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். |
|
|
|
| நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை இரண்டாவது அமர்வினை அறிவித்துள்ளது! தம் மீதான அவதூறு பற்றி ருத்ரா விளக்குகிறார்! |
| [ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 01:11.16 AM ] |
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவையின் இரண்டாவது அமர்வினை செப்டெம்பர் மாத இறுதிப்பகுதியில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதை பொதுமக்களுக்கு அறியத் தருவதில் நாம் மகிழ்வடைகிறோம். [மேலும்] |
| யாழ். புலோலி வாசிக்கு மரண தண்டனை : தீர்ப்பு வழங்கப்பட்டதும் கைதி மாடியில் இருந்து குதித்துள்ளார் |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:15.51 PM ] |
யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் இன்று கைதி ஒருவருக்கு மரண தண்டனையை விதித்தது. இதனை தண்டனை வழங்கப்பட்ட கைதி யாழ்ப்பாண நீதிமன்ற கட்டிடத்தொகுதியில் இருந்து கீழே குதித்துள்ளார். [மேலும்] |
| இலங்கைப் பணிப் பெண் மீது சித்திரவதை மேற்கொள்ளப்படவில்லை: சவூதி அரேபியா |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 04:28.17 PM ] |
இலங்கைப் பணிப் பெண் மீது சித்திரவதை மேற்கொள்ளப்படவில்லை என சவூதி அரேபிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். [மேலும்] |
| புலிகள் பயன்படுத்திய விமானத்தின் பாகங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் மீட்பு |
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 03:37.32 PM ] [ ] |
விடுதலைப் புலிகள் பயன்படுத்திய விமானத்தின் பாகங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் வான் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. [மேலும்] | | (2ம் இணைப்பு) |
| தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற இந்தியா தவறிவிட்டது: நிருபமா முன் பேராசிரியர் சிற்றம்பலம் கவலை |
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 02:42.17 AM ] [ ] |
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதித் தருணங்களில் இந்தியா வழங்கிய ஆயுதங்களே பொது மக்கள் பெருமளவில் கொல்லப்படுவதற்குக் காரணமாக அமைந்ததாக தமிழ் மக்கள் இன்னமும் கருதுவதாக பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் தெரிவித்தார். [மேலும்] |
|
|
| advertisement |
|
|