Switch to
   
   
   
செய்தி
இலங்கையில் "இந்திய திரைப்பட விழா" அழைப்பு : அஜீத், விஜய் புறக்கணிப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 25 ஏப்ரல் 2010, 01:11.14 PM GMT +05:30 ]
இலங்கை தலைநகர் கொழும்பில் வருகிற ஜூன் மாதம் 3ம்தேதி முதல் 5ம்தேதி வரை ஐ.ஐ.எப்.ஏ. எனப்படும் சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழா நடக்கிறது.

இதில் சிறப்பு விருந்தினர்களாக பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் அவரது மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.

இந்த விழாவில் பங்கேற்க வருமாறு தமிழின் முன்னணி நாயகர்களுக்கு இலங்கை அரசு சார்பிலும், அமிதாப் பச்சன் சார்பிலும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருக்கிறதாம்.

இலங்கையில் நடக்கும் விழா என்பதால் அழைப்பிதழை பார்த்து முன்னணி நாயகர்கள் பலரும் மிரண்டு போய் இருக்கிறார்களாம்.

அதுபற்றி கருத்து சொல்லக் கூட ஒருவரும் முன்வரவில்லை.

கமல்ஹாசன், அஜித், விஜய் என முன்னணி நாயகர்கள் அழைப்பிதழுக்கு எந்த ரியாக்‌ஷனும் காட்டாமல் புறக்கணித்து விட்டதால், இலங்கையும், தமிழ் சினிமாவும் எந்த அளவு பிரிக்க முடியாதது என்பதை உணர்த்த விழாக்குழுவினர், இரண்டாம் கட்ட நடிகர்களுக்கு வலைவீசி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மணிரத்னம் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ராவணா படத்தை இலங்கை திரைப்பட விழாவில் திரையி‌ட திட்டமிட்டிருக்கும் விழாக்குழுவினர், மணிரத்னத்துக்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.

இலங்கை விழாவில் கலந்து கொண்டால், தன் மீது பெரும் மதிப்பு வைத்திருக்கும் தமிழ் ரசிகர்களின் கோபத்தை சம்பாதிக்க வேண்டியிருக்குமே என்ற குழப்பத்தில் இருக்கிறாராம் மணிரத்னம்.

பிந்திய 15 செய்திகள்
Sponsor
Advertisements
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை இரண்டாவது அமர்வினை அறிவித்துள்ளது! தம் மீதான அவதூறு பற்றி ருத்ரா விளக்குகிறார்!
[ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 01:11.16 AM ]
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவையின் இரண்டாவது அமர்வினை செப்டெம்பர் மாத இறுதிப்பகுதியில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதை பொதுமக்களுக்கு அறியத் தருவதில் நாம் மகிழ்வடைகிறோம். [மேலும்]
யாழ். புலோலி வாசிக்கு மரண தண்டனை : தீர்ப்பு வழங்கப்பட்டதும் கைதி மாடியில் இருந்து குதித்துள்ளார்
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:15.51 PM ]
யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் இன்று கைதி ஒருவருக்கு மரண தண்டனையை விதித்தது. இதனை தண்டனை வழங்கப்பட்ட கைதி யாழ்ப்பாண நீதிமன்ற கட்டிடத்தொகுதியில் இருந்து கீழே குதித்துள்ளார். [மேலும்]
இலங்கைப் பணிப் பெண் மீது சித்திரவதை மேற்கொள்ளப்படவில்லை: சவூதி அரேபியா
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 04:28.17 PM ]
இலங்கைப் பணிப் பெண் மீது சித்திரவதை மேற்கொள்ளப்படவில்லை என சவூதி அரேபிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். [மேலும்]
புலிகள் பயன்படுத்திய விமானத்தின் பாகங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் மீட்பு
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 03:37.32 PM ] []
விடுதலைப் புலிகள் பயன்படுத்திய விமானத்தின் பாகங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் வான் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
(2ம் இணைப்பு)
தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற இந்தியா தவறிவிட்டது: நிருபமா முன் பேராசிரியர் சிற்றம்பலம் கவலை
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 02:42.17 AM ] []
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதித் தருணங்களில் இந்தியா வழங்கிய ஆயுதங்களே பொது மக்கள் பெருமளவில் கொல்லப்படுவதற்குக் காரணமாக அமைந்ததாக தமிழ் மக்கள் இன்னமும் கருதுவதாக பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் தெரிவித்தார். [மேலும்]
ஒரு பெண் போராளியின் கண்ணீர் கதை! அனாதைகளாக்கப்பட்ட பிள்ளைகளின் கண்ணீரை யார் துடைப்பார்?: இரா.துரைரத்தினம்
[ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 08:04.17 AM ] []
தமது இனத்தின் விடுதலைக்காக தங்களின் உயிர்களை தியாகம் செய்த போராளிகள் பெரும் நம்பிக்கையோடுதான் அந்த மண்ணைவிட்டு பிரிந்து போனார்கள். தங்களின் பிள்ளைகளை தங்களின் குடும்பங்களை தமது இனம் கைவிட்டு விடாது என்று மலைபோல் நம்பியிருந்தார்கள். [மேலும்]
விளம்பரம்
advertisement