Switch to
   
   
   
செய்தி
  • Photo
தமிழ் இளைஞர்கள் தேசிய அரசியலில் ஈடுபட வேண்டும் : கனடிய அமைச்சர்
[ ஞாயிற்றுக்கிழமை, 25 ஏப்ரல் 2010, 03:27.14 PM GMT +05:30 ]
மனித உரிமைகளிற்கான கனடிய மையத்தின் ஏற்பட்டில் நேற்று சனிக்கிழமை ரொறன்ரோ நகர மண்டபத்தில் இடம்பெற்ற அரசியற் செயற்பாட்டாளர்கள், வேட்பாளர்கள், மற்றும் தொண்டர்களிற்கான கருத்தரங்கில் பேசிய கனடிய குடிவரவு அமைச்சரே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பல்வேறு கட்சிகளையும் அமைப்புக்களையும் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், வேட்பாளர்கள் மத்திய மற்றும் மாகாண அமைச்சர்கள் என சுமார் 200 பேர் கலந்து கொண்ட இந் நிகழ்வில் பேசிய கனடியக் குடிவரவு மற்றும் பல்கலாச்சார அமைச்சர் ஜேசன் கெனி அவர்களே மேற்கண்டவாறு தெரிவித்ததோடு,

இவ்வாறு இளைய வயதில் புலம்பெயர்ந்த சமூகத்தினர் அரசியலில் ஈடுபடும் போது ஜனநாயக வழிமுறைகளில் பிரச்சினைகளிற்கான தீர்வுகளைக் காண்பதற்கான வாய்ப்புக்களைப் பெறுகிறார்கள் என்றும், அதுபோலவே கருத்து மோதல்களிற்கு கருத்துக்களாலேயே பதிலளிக்கும் பக்குவத்தன்மைப் பெறுகிறார்கள் என்றும் தெரிவித்ததோடு,

ஜனநாயக மரபுகளின் படி கருத்துப் பகிர்வில் ஈடுபடும் சுதந்திரம் கனடியர்கள் ஒவ்வொருவருக்கும் உண்டெனவும் அவ்வாறான கருத்துப் பரிமாற்றத்தில் சகலரையும் ஈடுபடுத்திச் செல்வதே சிறந்த ஜனநாயகம் என்றும் தெரிவித்ததோடு,

மற்றயைவரின் கருத்து ஒருவருக்கு பிடிக்காவிட்டால் அதற்கான பதில்கருத்தை அவர் வழங்குவதே ஆரோக்கியமான அரசியல் என்றும் அதை விடுத்து எதிர்க்கருத்துத் தெரிவிப்பவரை மிரட்டுதல் அல்லது மறைமுகமான பயமுறுத்தலிற்கு ஆட்படுத்துதல் என்பன ஆரோக்கியமான ஒரு சமுதாயக் கட்டமைப்பை ஏற்படுத்த முடியாது எனவும் தெரிவித்தார்.

மனித உரிமைகளை மையப்படுத்தி ஆரம்பிக்கப்பட்ட இவ்வமைப்பு இளைஞர்களை அரசியல் மயமாக்க ஒரு சிறந்த ஊடகமாக அமையும் எனவும் அவர்களை வழிநடத்தும் எனவும் தான் நம்புவதாகத் தெரிவித்தார்.

அவ்விழாவில் பேசிய வெளிநாட்டமைச்சர் பீற்றர் கென்ற் அவர்கள் மாநகர, மாகாண, மத்திய அரசியலில் இளையவர்கள் மற்றும் புதிய குடிவரவாளர்கள் ஈடுபட வேண்டும் என்று தெரிவித்ததோடு எவ்வாறான வழிமுறைகளை கையாள வேண்டும் என்பதையும் விளக்கினார்.

இவர்களோடு வேறு பல பிரமுகர்களும் இந் நிகழ்வில் உரையாற்றினர்.


செய்திகள்: இந்தியா, தமிழகம், வணிகம், வீடியோ, கட்டுரைகள், நேர்காணல்

பிந்திய 15 செய்திகள்
Sponsor
Advertisements
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை இரண்டாவது அமர்வினை அறிவித்துள்ளது! தம் மீதான அவதூறு பற்றி ருத்ரா விளக்குகிறார்!
[ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 01:11.16 AM ]
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவையின் இரண்டாவது அமர்வினை செப்டெம்பர் மாத இறுதிப்பகுதியில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதை பொதுமக்களுக்கு அறியத் தருவதில் நாம் மகிழ்வடைகிறோம். [மேலும்]
யாழ். புலோலி வாசிக்கு மரண தண்டனை : தீர்ப்பு வழங்கப்பட்டதும் கைதி மாடியில் இருந்து குதித்துள்ளார்
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:15.51 PM ]
யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் இன்று கைதி ஒருவருக்கு மரண தண்டனையை விதித்தது. இதனை தண்டனை வழங்கப்பட்ட கைதி யாழ்ப்பாண நீதிமன்ற கட்டிடத்தொகுதியில் இருந்து கீழே குதித்துள்ளார். [மேலும்]
இலங்கைப் பணிப் பெண் மீது சித்திரவதை மேற்கொள்ளப்படவில்லை: சவூதி அரேபியா
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 04:28.17 PM ]
இலங்கைப் பணிப் பெண் மீது சித்திரவதை மேற்கொள்ளப்படவில்லை என சவூதி அரேபிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். [மேலும்]
புலிகள் பயன்படுத்திய விமானத்தின் பாகங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் மீட்பு
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 03:37.32 PM ] []
விடுதலைப் புலிகள் பயன்படுத்திய விமானத்தின் பாகங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் வான் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
(2ம் இணைப்பு)
தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற இந்தியா தவறிவிட்டது: நிருபமா முன் பேராசிரியர் சிற்றம்பலம் கவலை
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 02:42.17 AM ] []
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதித் தருணங்களில் இந்தியா வழங்கிய ஆயுதங்களே பொது மக்கள் பெருமளவில் கொல்லப்படுவதற்குக் காரணமாக அமைந்ததாக தமிழ் மக்கள் இன்னமும் கருதுவதாக பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் தெரிவித்தார். [மேலும்]
ஒரு பெண் போராளியின் கண்ணீர் கதை! அனாதைகளாக்கப்பட்ட பிள்ளைகளின் கண்ணீரை யார் துடைப்பார்?: இரா.துரைரத்தினம்
[ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 08:04.17 AM ] []
தமது இனத்தின் விடுதலைக்காக தங்களின் உயிர்களை தியாகம் செய்த போராளிகள் பெரும் நம்பிக்கையோடுதான் அந்த மண்ணைவிட்டு பிரிந்து போனார்கள். தங்களின் பிள்ளைகளை தங்களின் குடும்பங்களை தமது இனம் கைவிட்டு விடாது என்று மலைபோல் நம்பியிருந்தார்கள். [மேலும்]
விளம்பரம்
advertisement